Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:40:22 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5348
#KOTW5348
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, டிசம்பர் 26, 2010
கீழக்கரை அருகே கடலில் படகு மூழ்கியதில் 16 பேர் பரிதாப பலி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3274 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ராமநாதபுரம் முள்ளித்தீவு அருகே நாட்டுப்படகில் தீவு பகுதிகளை சுற்றிப்பார்க்க சென்ற குடும்ப உறவினர்கள் 20 க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கினர். 13 பேர் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. இறந்தவர்கள் 20 பேர் வரை இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.





ராமநாதபுரம் அருகே உள்ள பெரியப்பட்டணத்தை சேர்ந்த குத்தூஸ் ஆலின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இன்று அதிகாலையில் 2 நாட்டுப்படகு மூலம் அப்பாத்தீவு மற்றும் மாலைத்தீவுக்கு சென்று சுற்றிப்பார்க்க புறப்பட்டனர். இந்த படகில் உயிர்காக்க உதவும் லைப் ஜாக்கெட் எதுவும் இல்லை. மன்னார் வளைகுடா , முள்ளித்தீவு அருகே சென்ற போது ஒரு படகு மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து நீரில் குதித்தவர்கள் அருகில் வந்த படகில் தொற்றியுள்னர்.

இதனையடுத்து இரண்டு படகுகளும் தண்ணீரில் தள்ளாடி மூழ்க துவங்கியது. ஒரு படகு முற்றிலுமாக மூழ்கி விட்டது. தகவல் அறிந்த உறவினர்கள் மற்றொரு படகு மூலம் கடல் நோக்கி புறப்பட்டனர். கடலோர காவல்படையினர் மற்றும் விமான படையினர் அங்கு விரைந்தனர். விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றும் உச்சிப்புளியில் இருந்து சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

படகில் 40 பேர் வரை சென்றிருக்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரை 13 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலியானவர்களில் பெண்கள், குழந்தைகள் அதிகம் அடங்குவர். இன்னும் பலரது நிலைமை குறித்து முழு விவரம் அறியப்படவில்லை. கடலில் மூழ்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் வெளிநாடுகளில் இருக்கும் உறவினர்கள் டிசம்பர் மாதம் சொந்த ஊருக்கு வருவது வழக்கம். இவ்வாறு ஆஸ்திரேலியா , துபாய், உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெரியப்பட்டணத்திற்கு வந்தவர்கள் அப்பாத்தீவுக்கு கிளம்பியுள்ளனர். குறிப்பாக இது போன்ற தீவுக்கு செல்ல முறையான அனுமதி வாங்க வேண்டும். ஆனால் படகில் சென்றவர்கள் எவ்வித அனுமதியும் பெறவில்லை என்று தெரியவருகிறது.

தகவல்:
தினமலர்.காம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. என்ன சொல்ல !!
posted by M.Sajith (DUBAI) [26 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1819

எப்பொதுதான் நாம் திருந்துவோமோ தெரியவில்லை..

இன்னமும் எத்தனை விபத்துக்கள், எத்தனை உயிர் போகவேண்டுமோ நாம் படிப்பினை பெற.

மீன்பிடி படகில் சுற்றிப்பர்க்க கடலில் செல்வதும், ஓடிவரும் காளையை அடக்குவதையும் பெருமையக சொல்லிக் கொள்வதை தமிழன் விடப்போவதில்லை - இதுபோன்ற சம்பவங்களும் நிற்கபோவதில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. யார் பொறுப்பு?
posted by mauroof (Dubai) [27 December 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1826

இது போன்ற அபாயமிகுந்த சுற்றுலாக்கள் செல்லும்பொழுது சட்டத்தையும் பாதுகாப்பு ஒழுங்குகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது போன்ற பல சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது என்றாலும் பொதுமக்களில் பெரும்பாலோர் அஜாக்கிரதயாகவே இருக்கின்றனர். மூழ்கிய உடன் மீட்பு பணிக்கு விரையும் அதிகாரிகள் இது போன்று அனுமதி இல்லாமல் செல்வோரை ஏன் தடுப்பதில்லை? ஆக இரு தரப்பினரின் அஜாக்கிரதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். மர்ஹூம்களின் மக்பிரத்தை அல்லாஹ் பிரகாசமாக்கி வைப்பானாக. மேலும் இவர்களது உறவினர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நல்ல பொறுமையையும் மன வலிமையையும் தரவேண்டும் என பிரார்த்திக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Sajith ur rite..
posted by Ibrahim (Chennai) [27 December 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1827

As Bro Sajith stated it is 100% rite..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Sue the men doing this business
posted by Shakeel ahamed (Seattle, USA) [27 December 2010]
IP: 24.*.*.* United States | Comment Reference Number: 1829

Govt should ban this business or permission to take public in unprotective boats even for free.

Why is implementing law very difficult in our country?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Curse of India !
posted by M.Sajith (Dubai) [28 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1841

What else is the problem in India? Implementation has been the problem, never was an issue in planning and never with resources.

First five year plan started since Nehru’s days and till date implementation of a few things in that is pending!!

When situations are such, all I can remember is what Kannadasan said once..

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது - அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது - திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

I’m sure there was no permission issued to such services by fishing boats.

Like the other friend mentioned, no officers interfere to protect as they are “serviced” with their regular quota of currency, sometimes as little as 100Rs.

The only way out – Self-awareness and nothing else.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved