சஊதி அரபிய்யாவிலுள்ள புனித மக்கா ஹரம் ஷரீஃபில் நடைபெறும் அகில உலக திருக்குர்ஆன் ஹிஃப்ழுப் போட்டியில் காயல் இளவல் கலந்துகொள்கிறார். விபரம் பின்வருமாறு:-
போட்டி விபரம்:
சஊதி அரபிய்யா - மக்கா முகர்ரமாவிலுள்ள புனித மஸ்ஜிதுல் ஹரமில் (கஃபாவில்) மன்னர் அப்துல் அஜீஸ் அகில உலக 32ஆவது திருக்குர்ஆன் ஹிஃப்ழுப் போட்டி 26.12.2010 ஞாயிற்றுக்கிழமையன்று துவங்கியது.
இளைஞர்களிடையே திருக்குர்ஆன் ஓதலின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்படும் இப்போட்டியை சஊதி அரபிய்யாவின் இஸ்லாமிய விழிப்புணர்வுத் துறை அமைச்சர் ஸாலிஹ் அஷ்ஷெய்க் துவக்கி வைத்தார். இதுவரை சஊதி அரபிய்யாவின் பல பகுதிகளில் நடைபெற்று வந்த இப்போட்டி புனித மக்கா ஹரம் ஷரீஃபில் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.
ஐந்து பிரிவுகளாக நடத்தப்படும் இப்போட்டியில், 64 நாடுகளைச் சேர்ந்த 188 ஹாஃபிழ்கள் (திருக்குர்ஆனை மனனம் செய்தவர்கள்) பங்கேற்கின்றனர். பங்கேற்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் சஊதி அரசு அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுள்ளது.
பிரிவு 1:
30 ஜுஸ்உகள் (முழு குர்ஆன்) பாட அளவைக் கொண்ட இப்பிரிவின் கீழ் பங்கேற்கும் போட்டியாளர்கள் கேட்கப்படும் திருக்குர்ஆன் வசனங்களை தஜ்வீதுடன் ஓத வேண்டும். அத்துடன், தேவையான வசனங்களுக்கு பொருளும், விளக்கமும் வழங்க வேண்டும்.
முதல் பரிசாக 75,000 சஊதி ரியாலும்,
இரண்டாம் பரிசாக 72,000 சஊதி ரியாலும்,
மூன்றாம் பரிசாக 69,000 சஊதி ரியாலும்,
நான்காம் பரிசாக 66,000 சஊதி ரியாலும்,
ஐந்தாம் பரிசாக 63,000 சஊதி ரியாலும் வழங்கப்படவுள்ளது.
இப்பிரிவின் கீழ் 21 ஹாஃபிழ்கள் போட்டியில் பங்கேற்கின்றனர்.
பிரிவு 2:
30 ஜுஸ்உகள் (முழு குர்ஆன்) பாட அளவைக் கொண்ட இப்பிரிவின் கீழ் பங்கேற்கும் போட்டியாளர்கள், கேட்கப்படும் வசனங்களை தஜ்வீதுடன் ஓத வேண்டும்.
முதல் பரிசாக 55,000 சஊதி ரியாலும்,
இரண்டாம் பரிசாக 52,000 சஊதி ரியாலும்,
மூன்றாம் பரிசாக 49,000 சஊதி ரியாலும்,
நான்காம் பரிசாக 46,000 சஊதி ரியாலும்,
ஐந்தாம் பரிசாக 43,000 சஊதி ரியாலும் வழங்கப்படவுள்ளது.
இப்பிரிவின் கீழ் 49 ஹாஃபிழ்கள் போட்டியில் பங்கேற்கின்றனர்.
பிரிவு 3:
20 ஜுஸ்உகள் பாட அளவைக் கொண்ட இப்பிரிவின் கீழ் பங்கேற்கும் போட்டியாளர்கள், கேட்கப்படும் வசனங்களை தஜ்வீதுடன் ஓத வேண்டும்.
முதல் பரிசாக 40,000 சஊதி ரியாலும்,
இரண்டாம் பரிசாக 37,000 சஊதி ரியாலும்,
மூன்றாம் பரிசாக 34,000 சஊதி ரியாலும்,
நான்காம் பரிசாக 31,000 சஊதி ரியாலும்,
ஐந்தாம் பரிசாக 28,000 சஊதி ரியாலும் வழங்கப்படவுள்ளது.
இப்பிரிவின் கீழ் 49 ஹாஃபிழ்கள் போட்டியில் பங்கேற்கின்றனர்.
பிரிவு 4:
10 ஜுஸ்உகள் பாட அளவைக் கொண்ட இப்பிரிவின் கீழ் பங்கேற்கும் போட்டியாளர்கள், கேட்கப்படும் வசனங்களை தஜ்வீதுடன் ஓத வேண்டும்.
முதல் பரிசாக 25,000 சஊதி ரியாலும்,
இரண்டாம் பரிசாக 22,000 சஊதி ரியாலும்,
மூன்றாம் பரிசாக 19,000 சஊதி ரியாலும்,
நான்காம் பரிசாக 16,000 சஊதி ரியாலும்,
ஐந்தாம் பரிசாக 13,000 சஊதி ரியாலும் வழங்கப்படவுள்ளது.
இப்பிரிவின் கீழ் 51 ஹாஃபிழ்கள் போட்டியில் பங்கேற்கின்றனர்.
பிரிவு 5:
முதல் பரிசாக 10,000 சஊதி ரியாலும்,
இரண்டாம் பரிசாக 8,000 சஊதி ரியாலும்,
மூன்றாம் பரிசாக 6,000 சஊதி ரியாலும்,
நான்காம் பரிசாக 5,000 சஊதி ரியாலும்,
ஐந்தாம் பரிசாக 4,000 சஊதி ரியாலும் வழங்கப்படவுள்ளது.
இப்பிரிவின் கீழ் 18 ஹாஃபிழ்கள் போட்டியில் பங்கேற்கின்றனர்.
செய்தி ஆதாரம்:
அரப் நியூஸ்.
காயல் இளவல் பங்கேற்பு:
இப்போட்டியில் நான்காம் பிரிவில் கலந்துகொள்கிறார் காயல்பட்டினம் கொச்சியார் தெருவைச் சார்ந்த ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப், ஹாஜியானி எம்.எஸ்.கத்ருன்னிஸா தம்பதியின் மகன் ஹாஃபிழ் பி.எஸ்.முஹம்மத் அல்அமீன்.
காயல்பட்டினம் ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் கற்றுத் தேர்ந்து ஹாஃபிழான இவர், அங்குள்ள மார்க்கக் கல்வி (தீனிய்யாத்) பிரிவிலும் கற்றுத் தேர்ந்துள்ளார். இவர் ஒரு ஏரோநாட்டிக்கல் பொறியாளர். இவரது தந்தை, ஹாங்காங் இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் அமைப்பின் தலைவராக உள்ளார்.
புனித கஃபத்துல்லாஹ்வில் நடைபெறும் திருக்குர்ஆன் மனனப் போட்டியில் ஹாங்காங் நாட்டின் "The Incorporated Trustees of The Islamic Community Fund of Hong Kong" சார்பில் இவரும், ஜீஷான் (Zeeshaan) என்ற மாணவரும் கலந்துகொள்கின்றனர். இவ்விருவருக்கும் பொறுப்பாளராக (Guardian) ஹாங்காங் கவ்லூன் பள்ளி மத்ரஸா ஆசிரியர் ஹாஃபிழ் நஈம் உடன் சென்றுள்ளார்.
போட்டியில் கலந்துகொள்ளச் சென்றுள்ள இம்மாணவர்கள் வெற்றியுடன் திரும்பிட பிரார்த்திக்குமாறு அவர்களுக்கு போட்டிக்கான தீவிர பயிற்சியளித்துள்ள ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ, “வெள்ளை வேட்டி” அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் ஆகியோரும், இதர ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
போட்டியாளர்கள் இருவரும் போட்டியில் பங்கேற்பதற்காக, ஹாங்காங் கவ்லூன் பள்ளியில் ஒன்றுகூடி, அங்கிருந்து இஹ்ராம் உடையில் ஹாங்காங் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட காட்சி:-
1989இல்...
கடந்த 1989ஆம் ஆண்டு நடைபெற்ற இதே போட்டியில், இளவல் பி.எஸ்.முஹம்மத் அல்அமீனின் சகோதரர் ஹாஃபிழ் பி.எஸ்.அஹ்மத் ஸாலிஹ், ஹாஃபிழ் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா ஆகியோர், காயல்பட்டினம் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா மார்கக் கல்வி நிறுவனத்தின் திருக்குர்ஆன் மனனப் பிரிவின் சார்பில் கலந்துகொண்டதும், அவர்களுக்கு பொறுப்பாளராக மத்ரஸா முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ உடன் சென்றதும் குறிப்பிடத்தக்கது.
செய்தித் தொகுப்பு:
ஹாஃபிழ் M.A.ஷெய்கு தாவூத் இத்ரீஸ் (ரியாத்),
ஹாஃபிழ் N.T.சதக்கத்துல்லாஹ் (ரியாத்),
S.A.செய்யித் இப்ராஹீம் (ரியாத்) மற்றும்
ஹாஃபிழ் V.M.T.முஹம்மத் ஹஸன் (ஹாங்காங்).
படங்கள்:
ஹாஜி B.S.ஷாஹுல் ஹமீத் (ஹாங்காங்). |