அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லவீ எம்.ஐ.எம்.ரிஸ்வீ முஃப்தீ உரையாற்றுகிறார்.
காயல்பட்டினம் ஐக்கிய சமாதானப் பேரவை சார்பில், இன்று மாலை 05.00 மணிக்கு, மரைக்கார்பள்ளித் தெரு சந்திப்பிலுள்ள மஹான் சுலைமான் வலிய்யுல்லாஹ் திடலில் இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் மவ்லவீ எம்.ஐ.எம்.ரிஸ்வீ முஃப்தீ, “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஐக்கிய சமாதானப் பேரவை மேலாளர் புகாரீ தலைமையில் ஏற்பாட்டுக் குழுவினர் செய்து வருகின்றனர். |