காயல்பட்டின நகராட்சியின் துணைத் தலைவர் கஸ்ஸாலி மரைக்கார் காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். இப்பேட்டியில் துணைத் தலைவர் புதிய குடி நீர் திட்டம் குறித்த ஐயங்களுக்கு விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
ஐக்கிய பேரவை மூலம் 1 கோடி ரூபாய் - 2000 இணைப்புகளுக்கான முன் தொகையாக - பெற்று, பிப்ரவரி (2011) இறுதிக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கபடுவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், புதிய குடி நீர் திட்டம் வந்தப்பின் அட்வான்ஸ் தொகை அதிகரிக்கப்பட வாய்ப்பில்லை என்றும், ஆனால் மாத கட்டணம் கூட்டப்படுவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
1. புதிய குடி நீர் திட்டம் posted byIBN SAHIB (Dammam)[29 December 2010] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1885
சகோதரர் கஸ்ஸாலி அவர்களே!
இத்திட்டத்தின் கீழ், பொன்னன்குறிச்சியிலிருந்து காயல்பட்டினத்திற்கென தனிக்குழாய் அமைத்து, நேரடியாக குடிநீர் நகர் முழுக்க வினியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் நமதூர் மக்களின் பணத்துடன் செயல்வடிவத்திற்கு வந்த பின் தமிழக அரசு புதிய துணை இணைப்புகளை ஏற்படுத்தி அருகாமையில் உள்ள ஊர்களுக்கும் திசை திருப்ப வாய்ப்பு உள்ளதா? என்பதை அறியத் தரவும்.
2. விழிப்புனர்வுடன் இருப்பது அவசியமே posted byKasali maricar (Kayalpattinam)[30 December 2010] IP: 117.*.*.* India | Comment Reference Number: 1907
காயல்பட்டிணம் இரண்டாம் குடிநீர் திட்டம் கூட்டு குடிநீர் திட்டம் கிடையாது, காயல்பட்டிணத்திற்கேன தனி குழாய் மூலம் நமக்கு மட்டும் வரகூடிய திட்டம் பிறஊர்களுக்கு இத்திட்டம் மூலம் கிடைக்கும் குடிநீர் பகிர்தலிக்க பட மட்டாது. இருந்தாலும் இத்திட்டம் முழுமை பெறும் வரை விழிப்புனர்வுடன் இருப்பது அவசியமே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross