காயல்பட்டினம் நகரில் புற்றுநோய்க்கான காரணத்தை அதிகாரப்பூர்வமாக கண்டறிந்திடும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு Cancer Fact Finding Committee - CFFC (புற்றுநோய் காரணி கண்டறியும் குழு).
உலக காயல் நல மன்றங்கள் சிலவற்றின் அனுசரணையுடனும், தனிநபர்களின் ஒத்துழைப்புகளுடனும் செயல்பட தீர்மானித்துள்ள இந்த அமைப்பின் சார்பில், காயல்பட்டினத்தில் புற்றுநோய் பரவலுக்கான காரணியை முறைப்படி ஆராய்வதற்கான செயல்திட்டம் வகுப்பது குறித்து காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை அலுவலகத்தில், 28.12.2010 அன்று காலை 11.00 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புற்றுநோய் குறித்து நகரின் பல்வேறு அமைப்புகளால் ஏற்கனவே பல செயல்திட்டங்கள் துவக்கப்பட்டு செய்யப்பட்டு வரும் நிலையில், அவை செய்கிற - செய்யவிருக்கிற பணிகள் குறித்த தகவல்களை பேரவையுடன் பரிமாறிக்கொள்வது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பல்லாக் சுலைமான், ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர், முத்து ஹாஜி, ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார், ஹாஜி எஸ்.கே.ஷாஹுல் ஹமீத், ஹாஜி மஹ்மூத் நெய்னா, ஹாஜி எஸ்.ஏ.கே.பாவா நவாஸ், பாலப்பா ஜலாலீ, ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்தாலோசனை மேற்கொண்டனர்.
|