ஆறுமுகநேரியில் நடைபெற்ற, பள்ளி – கல்லூரி மாணவ-மாணவியருக்கான வட்டார அளவிலான போட்டிகளில் சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அப்பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஆறுமுகநேரியில் இளைய தலைமுறையினர் முன்னோடிகள் சங்கத்தின் 13ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, 25.12.2010 அன்று, வட்டார அளவிலான பள்ளி - கல்லூரி மாணவ-மாணவியருக்காக, கட்டுரை, பாட்டு, பேச்சு, சுடோகு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், இந்து மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது.
அதில், காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவியர் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
அப்பள்ளியில் 09ஆம் வகுப்பு பயிலும் மாணவி எம்.ஏ.கே.உம்மு சல்மா ரைஹானா தமிழ் கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.
10ஆம் வகுப்பு பயிலும் டி.எம்.எஸ்.ஜம்ஜம் ஷரீஃபா பாட்டுப் போட்டியில் முதல் பரிசும்,
அதே வகுப்பில் பயிலும் எஸ்.எம்.கே.ராபியா, 11ஆம் வகுப்பு பயிலும் எஸ்.எம்.பி.அஹ்மத் ஸஃபானா ஆகியோர் அப்போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளனர்.
11ஆம் வகுப்பு பயிலும் டி.ஆயிஷா சல்மா ஆங்கில கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.
11ஆம் வகுப்பு பயிலும் எம்.ஏ.கே.சித்தி முபீனா தமிழ் பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.
காய்கறியில் உருவம் அமைக்கும் போட்டியில், 11ஆம் வகுப்பு மாணவியர் எம்.ஏ.கே.வாழிஹா பர்வீன், எம்.ஏ.எஸ்.ஜிஸ்மி ஹமீதா ஆகியோர் இரண்டாம் பரிசு பெற்றுள்ளனர்.
11ஆம் வகுப்பு மாணவி எல்.டி.அஹ்மத் நஸ்ஹத் குத்ஸிய்யா இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.
ரங்கோலி போட்டியில் 12ஆம் வகுப்பு மாணவியர் டி.எஸ்.தீப்தி, பி.எஸ்.எம்.கிழுறு ஃபாத்திமா ஆகியோர் முதல் பரிசு பெற்றுள்ளனர்.
ஓவியப் போட்டியில், 12ஆம் வகுப்பு மாணவி ஜி.எம்.ஹைருன்னிஸா நஸ்ஹத் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.
தமிழ் கட்டுரைப் போட்டியில், 12ஆம் வகுப்பு மாணவி எம்.என்.ஏ.ஹஸீன் முஃப்லிஹா இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.
போட்டிகளில் வென்ற இம்மாணவியரை, பள்ளி தாளாளர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம், முதல்வர் எம்.செண்பகவல்லி மற்றும் ஆசிரியையர் பாராட்டினர்.
மேலும், நமது பகுதியிலுள்ள இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, அரசின் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை இலவசமாக நடத்தி, நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு வேலைவாய்ப்பைப் பெற்றிட வாய்ப்பேற்படுத்திக் கொடுத்துள்ள ஆறுமுகநேரி இளம் முன்னோடிகள் சங்கத்தின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துவதாக, பள்ளி தாளாளரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலருமான ஹாஜி வாவு மொஹுதஸீம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
வீனஸ் ஸ்டூடியோ,
L.K.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |