தமிழக அரசு வழங்கும் மானியத்தைப் பெற்று, சொந்த முதல் தொகையையும் அத்துடன் இணைத்து, காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளின் முஸ்லிம் பெண்களை தொழில் முனைவோராக்கிடுவதற்காக திட்டம் வகுத்து செயல்படும் நோக்கில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று இன்று இரவு 07.00 மணிக்கு, காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவிலுள்ள ஹாஜி எஸ்.இப்னு சஊத் இல்லத்தில் நடைபெற்றது.
ஹாஜி காக்கா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, மாவட்ட ஆட்சியரகத்தின் சிறுபான்மை பெண்கள் நலப்பிரிவின் பொறுப்பாளர் அ.வஹீதா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை, இஸ்லாமிக் பைத்துல்மால் (ஐ.ஐ.எம்.) ஆகிய - நகரின் இரண்டு பைத்துல்மால் அமைப்புகளின் பிரதிநிதிகளையும், பொதுநலனில் அக்கறை கொண்ட செல்வந்தர்களையும் ஒன்றுகூட்டி, எல்.கே.மேனிலைப்பள்ளியில் நாளை மாலை 05.00 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்துவதென்றும், அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் தேதியில் நகர மகளிரை ஒன்றுகூட்டி, அவர்களிடையே பெண்கள் தொழில் செய்து வருமானமீட்டுவதின் அவசியம் குறித்து எடுத்துக்கூறி, நகரின் கலாச்சார கட்டுக்கோப்பு சிதையாவண்ணம் அவர்களுக்கேற்ற தொழில் துறை அமைப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஹாஜி எஸ்.இப்னு சஊத், ஹாஜி முஹம்மத் தம்பி, ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி எல்.கே.கே.லெப்பைத்தம்பி, ஹாஜி காஜா அரபி, ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, ஹாஜி எல்.கே.கே.கனி முஹம்மத், ஹாஜி எஸ்.எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
தகவல்:
ஹாஜி S.S.M.ஸதக்கத்துல்லாஹ்,
சென்னை. |