காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் புதிதாக வகுப்பறை ஒன்று கட்டுவதற்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.
நேற்று (02.01.2011) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் டாக்டர் அஷ்ரஃப் தலைமை தாங்கி, புதிய வகுப்பறைக்கான முதல் அடிக்கல்லை நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, முன்னிலை வகித்த பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை, துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, ஹாஜி காக்கா, லண்டன் டாக்டர் செய்யித் அஹ்மத் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் அடிக்கல் நாட்டினர்.
அண்மையில், இப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்ற வந்திருந்த திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிவாவின் நிதியிலிருந்து ரூபாய் ஐந்து லட்சம் செலவில் இந்த வகுப்பறை கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
L.K.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |