சபர் (1432) மாத அமாவாசை ஜனவரி 4 செவ்வாய் அன்று - இங்கிலாந்து நேரப்படி காலை 9:05 மணி அளவில் ஏற்படுகிறது. அப்போது இந்திய
நேரம் மதியம் 2:35 மணி. அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மறையும் நேரம் 6:11, சந்திரன் மறையும் நேரம் 6:16. சூரியன் மறைந்து ஐந்து நிமிடங்கள் கழித்து சந்திரன் மறைந்தாலும், அவ்வேளையில் சந்திரனின் வயது ஏறத்தாழ 3.5 மணி நேரமாக இருந்தாலும், காயல்பட்டணத்தில் வெறுங்கண்ணுக்கு பிறை தெரியாது. மேலும் அன்று பசிபிக் கடலின் ஓரப்பகுதியில் மட்டும் பிறை வெறுங்கண்ணுக்கு தெரியும்.
ஜனவரி 5 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:12 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:08. சூரியன் மறையும்போது
சந்திரனின் வயது 27.5 மணி நேரம். வெறுங்கண்கள் கொண்டு பிறையை காயல்பட்டணத்தில் அன்று காணலாம்.
ஜனவரி 5 அன்று ஆஸ்திரேலியாவின் மத்திய மற்றும் தென் பகுதி, நியூசிலாந்து தவிர்த்து உலகின் அனைத்து இடங்களிலும் பிறையை அன்று காணலாம்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு ஜனவரி 4 (அமாவாசை) அன்று முஹர்ரம் 29 பூர்த்தி ஆகிறது. அன்று உலகில் எங்கும் பிறை வெறுங்கண்ணுக்கு தெரிய வாய்ப்பில்லாததால் ஜனவரி 5 அன்று அவர்கள் முஹர்ரம் 30 பூர்த்தி செய்வர்.
ஜனவரி 6 - அவர்களுக்கு சபர் 1 ஆகும்.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு ஜனவரி 4 (அமாவாசை) அன்று முஹர்ரம் 28 முடிந்திருக்கும். ஜனவரி 5 அன்று காயல்பட்டணம் உட்பட உலகின் அனைத்து இடங்களிலும் பிறைக்கான வாய்ப்புள்ளதால் - ஜனவரி 5 அன்று முஹர்ரம் 29 பூர்த்திசெய்யப்பட்டு - அவர்களுக்கும் ஜனவரி 6 சபர் 1 ஆகும். மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக ஜனவரி 5 அன்று பிறை காணப்படாவிட்டால் ஜனவரி 6 அவர்களால் முஹர்ரம் 30 என பூர்த்திசெய்யப்பட்டு ஜனவரி 7 - சபர் 1 ஆகும்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்க்கு ஜனவரி 5 - சபர் 1 ஆகும்.
தகவல்:
www.kayalsky.com
[Administrator: News modified]
|