காயல்பட்டினம் கற்புடையார்பள்ளி வட்டம் (சிங்கித்துறை) கோஸ்மரை தர்கா அருகில், அரசின் சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த வீடுகளில், நகரின் பூர்வீகமற்றவர்களைப் புதிதாகக் குடியமர்த்தப் போவதாகக் கூறி, அரசு அதனைத் தடுக்கக் கோரி இன்று கடையடைப்பு போராட்டத்திற்கும், மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை காயல்பட்டினம் பிரதான வீதியில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இன்று காலை முதல் மாலை வரை நகரின் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
இன்று மாலை 04.30 மணிக்கு காயல்பட்டினம் பிரதான வீதி - நெசவுத் தெரு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கினார்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், கே.எம்.டி. மருத்துவமனை தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, ஐக்கியப் பேரவை செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான் ஜமாலுத்தீன், ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு முத்து ஹாஜி,
ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி, ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ, குருவித்துறைப்பள்ளி செயலர் ஹாஜி எஸ்.எம்.கபீர், ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார், ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார், ஹாஜி பிரபுத்தம்பி, இரட்டைக்குளத்துப் பள்ளி செயலாளர் ஹாஜி முஹ்யித்தீன் தம்பி, ஐக்கிய விளையாட்டு சங்க துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர்,
இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் (ஐ.ஐ.எம்.) குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, ஹாஜி ராவண்ணா அபுல்ஹஸன், ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத், ஏ.கே.பீர் முஹம்மத், ஹாஜி எல்.எஸ்.அன்வர், நகர்மன்ற உறுப்பினர் சுகு, ஹாஜி ஜரூக், ஹாஜி கைலானீ மற்றும் நகர ஜமாஅத் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
மஹ்ழரா அரபிக்கல்லூரியின் ஹிஃப்ழுப் பிரிவு பேராசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். ஐக்கியப் பேரவை துணைச் செயலாளர் ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர் வரவேற்றுப் பேசினார். தலைமையுரையைத் தொடர்ந்து, நகர பொதுநல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் கஸ்ஸாலி மரைக்கார், நகர்மன்ற உறுப்பினர் காசிராஜன், இரத்தினபுரி சமுதாயப் பிரதிநிதி இளந்தளிர் முத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மாரியப்பன், காங்கிரஸ் பிரமுகர் ஷாஜஹான், தி.மு.க. பிரமுகர் காயல் மவ்லானா,
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை கவுரவ ஆலோசகர் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத், ம.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் காயல் அமானுல்லாஹ், தே.மு.தி.க. நகர செயலாளர் கேப்டன் சதக்கத்துல்லாஹ், அருணாச்சலபுரம் பகுதி பிரமுகர் ராம்குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைச் செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப், அப்துர்ரஷீத் அவ்லியா மற்றும் பலர் உரையாற்றினர்.
மேற்படி கட்டிடப்பணிகள் தொடரப்பட்டால், நகர மக்கள் அனைவரும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டி வரும் என உரையாற்றியோர் பலர் தெரிவித்தனர். பின்னர் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. (தீர்மானங்கள் தனிச்செய்தியாக தரப்படும்.) ஐக்கியப் பேரவை துணைச் செயலாளர் ஹாஜி செய்யித் முஹம்மத் அலீ நன்றி கூற, மவ்லவீ முத்துச்சுடர் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீயின் துஆவுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகரின் அனைத்து ஜமாஅத்துகளைச் சார்ந்த பொதுமக்களும், அனைத்து அரசியல் கட்சிகள் - பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகளும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில், துணை ஆய்வாளர் சுவாமிதாஸ் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை கடையடைப்பு துவங்கியது முதல், மாலை கண்டன ஆர்ப்பாட்டம் முடியும் வரை நகரின் எந்தப் பகுதியிலும் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |