காயல்பட்டினம் கற்புடையார்பள்ளி வட்டம் (சிங்கித்துறை) கோஸ்மரை தர்கா அருகில், அரசின் சார்பில் தொகுப்பு வீடுகள் தற்போது கட்டப்பட்டு
வருகிறது. அதனைத் தடுக்கக் கோரி கடையடைப்பு போராட்டமும், பிரதான வீதியில் கண்டன ஆர்ப்பாட்டமும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப்
பேரவை சார்பில் நேற்று நடைபெற்றது.
ஆசிய கண்டத்தில் டிசம்பர் 26, 2004 அன்று ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு - இது காயல்பட்டணத்தில் நிறைவேற்றப்படும் மூன்றாவது குடியிருப்பு திட்டமாகும். முன்னரே நகரின் தென்பகுதியில், மங்களவாடிக்கு அருகே 70 குடியிருப்புகளும், கொம்புதுரை எனப்படும் கடையக்குடி பகுதியில் 8 குடியிருப்புகளும் சுனாமி திட்டங்களின் கீழ் கட்டப்பட்டுள்ளன. இந்த மூன்றாவது திட்டத்தின் கீழ் மொத்தம் 213 குடியிருப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழக அரசு தமிழகத்தில் - நகர்ப்புறங்களில் - சுனாமி திட்டங்களை நிறைவேற்ற தமிழ் நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு (TAMIL NADU SLUM CLEARANCE BOARD) உரிமம் வழங்கியிருந்தது. அதன்படி இந்த 169 தொகுப்பு வீடுகளுக்கான டெண்டர் - தமிழ் நாடு குடிசை மாற்று வாரியத்தின் மதுரை கிளை மூலமாக, Superintending Engineer பெயரில் - Rajiv Gandhi Rehabiltation Programme (RGRP) சுனாமி திட்ட அடிப்படையில் - கடந்த ஜூலை 17 அன்று வெளியிடப்பட்டது. இந்த டெண்டர் ஆகஸ்ட் 12 அன்று நிறைவுற்றது. இந்த டெண்டர் விதிகள்படி - குடியிருப்புகள் அனைத்தும் 6 மாதங்களில் கட்டிமுடிக்கப்பட வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross