உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தில், தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா அமைப்பினர் 03.01.2011 அன்று இரவு 07.00 மணியளவில் கலந்தாலோசனை செய்தனர்.
தக்வா செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நடப்பு கல்வியாண்டு வரை இக்ராஃ மூலம் கொடுக்கப்பட்டுள்ள கல்வி உதவித்தொகை, தக்வா சார்பில் இக்ராஃவில் புதிய உறுப்பினர்களானோரின் விபரங்கள், இக்ராஃவால் பெறப்பட்ட ஜகாத் நிதி வினியோகிக்கப்பட்ட முறை, விரைவில் வினியோகிக்கப்படவுள்ள பள்ளிச்சீருடை - பாடக்குறிப்பேடுகள் இலவச வினியோக ஏற்பாடுகள், இக்ராஃவின் நிர்வாகச் செலவுகள், அதன் அண்மைச் செயல்பாடுகள் குறித்த விளக்கங்களை இக்ராஃ நிர்வாக அதிகாரி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் தக்வா குழுவினரிடம் விளக்கினார்.
இக்கூட்டத்தில், வாவு ஷாஹுல் ஹமீத், ஹாஜி வாவு உவைஸ், ஹாஜி விளக்கு நூர் முஹம்மத் (துணைச் செயலாளர்), ஹாஜி எம்.ஏ.சதக்கத்துல்லாஹ், எம்.எச்.அபுல் மாலி, எம்.எச்.புகாரீ, எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப், எம்.எச்.செய்யித் முஹம்மத் ஸாலிஹ் (பொருளாளர்), எஸ்.ஏ.ரியாஸ், என்.எஸ்.தமீம் ஆகிய தக்வா அமைப்பின் அங்கத்தினரும்,
இக்ராஃ செயலாளர் (பொறுப்பு) கே.எம்.டி.சுலைமான், துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரும் கலந்துகொண்டனர். |