இந்தியாவின் கரையோர நீளம் சுமார் 6000 கிலோ மீட்டர் ஆகும். அந்தமான் மற்றும் லக்ஸ்வதீப் தீவுகளின் கரைகளையும் சேர்த்து கரையோர நீளம்
ஏறத்தாழ 7500 கிலோ மீட்டர் ஆகும். கோடிக்கணக்கான மக்கள் வாழும் இக்கரையினையும், அதில் உள்ள பிற இயற்கை வளங்களையும்
பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசாங்கம் பிப்ரவரி 19, 1991 அன்று 1986 ஆம் ஆண்டின் சுற்றுப்புற சூழல் [Environment (Protection) Act,
1986] சட்டத்தின் கீழ் ஆணை (Notification) ஒன்றை பிறப்பித்தது. இதுவே Coastal Regulation Zone (CRZ) Notification என்று
வழங்கப்படும் ஆணையாகும். அதன் முழு விபரம் ஆங்கில வடிவில் இப்பக்கத்திற்கு கடைசியில் உள்ளது.
இதன்படி இந்தியாவின் 7500 கிலோமீட்டர் நீள கரையோரத்தில் (கரையிலிரிந்து) 500 மீட்டர் வரை தொழிற்சாலைகளுக்கும், குடியிருப்புகளுக்கும்
இன்னும் பல காரியங்களுக்கும் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அவைகளை செயல்படுத்துவதற்காக மத்திய அளவிலும், மாநில அளவிலும்,
மாவட்ட அளவிலும் குழுக்கள் (Coastal Zone Management Authority) அமைக்கப்பட்டுள்ளன.
கரையோரத்திலிருந்து 500 மீட்டர் வரையிலான தூரத்தை அரசு 4 உட்பிரிவுகளாக பிரித்துள்ளது. இவைகள் CRZ-1, CRZ-2, CRZ-3, CRZ-4 ஆகும்.
மேலும் குறைவாக அலை அடிக்கும்போது உண்டாகும் எல்லை Low Tide Line (LTL) என்றும், அதிகமாக அலை அடிக்கும் போது உண்டாகும்
எல்லை High Tide Line (HTL) என்றும் நிர்ணையிக்கப்படுகிறது.
LTL மற்றும் HTLக்கு இடைப்பட்ட பகுதி CRZ -1 (ii) என்று அறிவிக்கப்பட்டு அப்பகுதிகளில் தடைகள் பல விதிக்கப்பட்டுள்ளன. காயல்பட்டணம்
உட்பட இந்தியாவின் அனைத்து கரையோரங்களின் LTL மற்றும் HTLக்கு இடைப்பட்ட பகுதி CRZ -1 (ii) பகுதி ஆகும். அதிகமாக அலை அடிக்கும்
போது உண்டாகும் எல்லை (High Tide Line - HTL) - 0 மீட்டர் ஆக கணக்கிடப்பட்டு, அதிலிருந்து நிலப்பகுதிகள் நோக்கி 500 மீட்டர் வரை CRZ-1
(i), CRZ-2, CRZ-3, CRZ-4 என்றும் பிரிக்கப்படுகிறது.
CRZ-4 விதிமுறைகள் அந்தமான் மற்றும் லக்ஸ்வதீப் தீவுகளுக்கானவை.
CRZ-1 (i) விதிகள் இயற்கை வளமிக்கபகுதிகள், பறவைகள் சரணாலயம், வரலாற்று சின்னங்கள் என பல
(Ecologically Sensitive) கரையோர பகுதிகளுக்கு பொருந்தும்.
CRZ-2 என்பது கரையோரம்வரை கட்டுமானங்கள் கொண்ட நகர்புற (City/Town/Municipality) பகுதிகளுக்கு பொருந்தும். CRZ-3 என்பது
கரையோரங்களில் குறைவான கட்டுமானம் உள்ள கிராம அல்லது நகராட்சி பகுதிகளுக்கு பொருந்தும்.
எந்த பகுதி எந்த வகையை சாரும் என்பதை முடிவு செய்ய குழுக்கள் அமைக்க, 1991 ஆம் ஆண்டு CRZ ஆணை பிறப்பிக்கப்படும் போதே,
ஒவ்வொரு மாநிலத்துக்கும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 1996ஆம் ஆண்டு தமிழகத்தில் கரையோரப்பகுதிகள் DTCP அமைப்பினால்
ஆய்வுசெய்யப்பட்டு, தமிழக கரையோரபகுதிகள் எந்தெந்த பிரிவை சேரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி காயல்பட்டணம் CRZ-3 வகையை
சார்ந்ததாக அறிவிக்கப்பட்டது.
இப்பகுதிகளில் கட்டுமான மற்றும் இதர பணிகள் கீழ் காணுமாறு வரையறுக்கப்பட்டுள்ளன:
CRZ-1
HTL (0 மீட்டர்) முதல் 500 மீட்டர் வரை எந்த புது கட்டுமானத்திற்கும் அனுமதி கிடையாது - சில விசயங்களை தவிர்த்து.
CRZ-2
HTL (0 மீட்டர்) முதல் 500 மீட்டர் வரை தற்போது உள்ள ரோடுகளுக்கு கடல்நோக்கி (Seaward side) உள்ள இடத்தில் எந்த கட்டுமானமும் கூடாது. அப்பகுதிகளில் முன்னரே
உள்ள கட்டிடங்களை மீண்டும் விதிகளுக்கு உட்பட்டு புதுப்பிக்கலாம்.
CRZ-3
HTL (0 மீட்டர்) முதல் 200 மீட்டர் வரை எந்த புது கட்டுமானத்திற்கும் அனுமதி கிடையாது (NO DEVELOPMENT ZONE). முன்னரே உள்ள கட்டிடங்களை மீண்டும் விதிகளுக்கு
உட்பட்டு புதுப்பிக்கலாம்.
200 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை காலி இடங்களை மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சகத்தின் அனுமதிபெற்று ஹோட்டல்கள் போன்ற சுற்றுலா
பயணிகளுக்கான வசதிகள் செய்யலாம்.
200 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை பகுதியில் முன்னரே உள்ள கட்டிடத்தை புதுப்பிக்கவோ, புதுகட்டிடங்களை கட்டவோ சில விதிமுறைகளுக்கு
உட்பட்டு செய்யலாம். - அவைகள் பாரம்பரிய உரிமை (Traditional Rights), மீனவ குடித்தனங்கள் போன்றவையாக இருப்பின் - சில விதிமுறைகளுக்கு உட்பட்டு
செய்யலாம். அவைகளுக்கு உரிமம் வழங்கும்போது அதிகாரிகள், அப்பகுதிகளில் தற்போது உள்ள கட்டிடங்களுக்கு - எண்ணிக்கையில்
- இரு மடங்கை தாண்டாமல்
பார்த்து கொள்ளவேண்டும். கட்டிடங்களின் உயரம் 9 மீட்டரை தாண்டியோ அல்லது இரண்டு மாடிகளுக்கு அதிகமாகவோ இருக்க கூடாது.
தற்போது சர்ச்சைக்குரிய கருப்புடையார் வட்டம் - சிங்கித்துரை கட்டுமான பணிகள் - HTL எல்லையில் இருந்து சுமார் 100 மீட்டர் வாக்கில் நடப்பதாக கூறப்படுகிறது. இதன் சட்டரீதியான நிலை என்ன?
நகராட்சியின் டிசம்பர் 31 தீர்மானப்படி காயல்பட்டணம் CRZ-1 பகுதி ஆகும். இது சரியெனில் - நாம் மேற்கண்டவாறு - கடலிலிருந்து 500 மீட்டர் வரை எந்த புது கட்டுமானங்களும் கூடாது. ஆகவே தற்போதைய சுனாமி கட்டுமானங்கள் விதிமுறை மீறலே.
காயல்பட்டணம்.காம் வசம் உள்ள 1996 ஆம் ஆண்டு தஸ்தாவேஜுகள்படி காயல்பட்டணம் CRZ-3 பகுதியை சார்ந்தது. இதன் விதிமுறைகள் 200 மீட்டர்க்கு தாண்டி புது கட்டுமானங்களை அனுமதிக்கின்றன. தற்போதைய கட்டுமானங்கள் 100 மீட்டர் வாக்கில் துவங்குகிறது என்பது சரி என்ற பட்சத்தில் CRZ-3 விதிகள்படியும் தற்போதைய சுனாமி கட்டுமானங்கள் விதிமுறை மீறலே.
இருப்பினும் நாம் பின்னர் காண இருக்கும் அரசு ஆணைகள் கூறுவதுபோல் - இந்த கட்டுமானங்களுக்கு முறையான CRZ அனுமதி பெறப்பட்டிருந்தால்
- இக்கட்டுமானங்கள் சட்டப்படி பிரச்சனைக்குரியதாகாது. அரசின் கருப்புடையார் வட்டம் - சிங்கித்துரை சுனாமி குடியிருப்பு
கட்டுமான திட்டம் 0 - 200 மீட்டர் பகுதிக்குரியது என்றே அரசினால்
அறிவிக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross