தற்பொழுது இலங்கை நாட்டில் AH1N1 நோயின் தாக்கம் மிகுதியாக இருப்பதாக அறியப்படுகிறது. இலங்கை நாட்டிற்கு பயணம் செய்யும் பயணிகள் AH1N1 நோயிலிருந்து பாதுகாக்க மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
--- பயணிகளுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் (காய்ச்சல், இருமல், தும்பல், தொண்டைப்புண்) தென்பட்டால், இலங்கை பயணத்தை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தல் வேண்டும்
--- பயணத்தின் போது பயணிகளுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி AH1N1 நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்
--- பயணிகள் இலங்கையில் பயணம் செய்யும் போது பன்றிக்காய்ச்சலுக்குரிய அறிகுறிகளினால் பாதிக்கப்பட்டால், அருகாமையில் உள்ள இலங்கை அரசு மருத்துவமனையை அணுகி நோய்க்கான சிகிச்சை பெற்றுக்கொள்ளவும்
--- இலங்கை நாட்டிற்கு பயணம் தொடங்குவதற்கு 2-3 வாரங்களுக்கு முன்பு AH1N1 நோய்க்கான தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளவும். சலுகை விலையில் நோய்க்கான தடுப்பு ஊசி சென்னை, கிண்டியில் உள்ள கிங் நிலையத்தில் வழங்கப்படுகிறது.
தகவல்:
இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம், சென்னை -9. |