இந்திய ஹஜ் குழு (HAJ COMMITTEE OF INDIA) மூலம் இவ்வருடம் ஹஜ் பயணம் மேற்கொள்வது குறித்து அதன் முதன்மைச் செயல் அலுவலர் டாக்டர் எஸ்.ஷாகிர் ஹுசைன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
(1) டிசம்பர் 22, 2010 அன்று புது டில்லியில் நடந்த இந்திய ஹஜ் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி - இவ்வருடம் (2011) இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள நாடியுள்ளோர், கண்டிப்பாக விண்ணப்பிக்கும் வேளையில் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். ஆகவே தற்போது பாஸ்போர்ட் இல்லாதவர்கள் முன்கூட்டியே விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற்று கொள்ளவேண்டும். பாஸ்போர்ட் உள்ளவர்களே குலுக்கலில் பங்கேற்க முடியும்
(2) தற்போது குலுக்கலுக்கு தனி விண்ணப்பமும், ஹஜ் பயணத்திற்கு தனி விண்ணப்பமும் பயன்படுத்தப்படுகிறது. இனி இரண்டுக்கும் ஒரே விண்ணப்பம் வழங்கப்பபடும்
(3) விண்ணப்பிக்கும் போது விண்ணப்பிக்கும் குழு தலைவரிடம் இருந்து (Head of cover) இரண்டு மொபைல் எண்கள் பெறப்படும். ஹஜ் பயணம் முடியும் வரை அந்த எண்களுக்கே ஹஜ் பயணம் குறித்த அனைத்து தகவல்களும் அனுப்பப்படும்
(4) விண்ணப்பிக்கும் போது விண்ணப்பிக்கும் குழு தலைவரிடம் இருந்து (Head of cover) கான்செல் செய்யப்பட்ட காசோலை (Cancelled Cheque) பெறப்படும். ஹஜ் பயணியர்க்கு பணம் திருப்பிகொடுக்க வேண்டிய சூழ்நிலைகளில் நேரடியாக அவர்கள் வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப இது பயன்படுத்தப்படும்
மேலும் மாநில ஹஜ் குழுக்களுக்கும், ஹஜ் தொண்டு நிறுவனங்களுக்கும் - ஹஜ் பயணம் மேற்கொள்ள நாடியுள்ளோருக்கு, பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்ய உதவும்படி இந்திய ஹஜ் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
தகவல்:
மூசா சாஹிப் |