வரும் 26.01.2011 இந்திய குடியரசு தினத்தன்று, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் பட்டம் பறக்க விடும் போட்டி நடத்தப்படவுள்ளது.
போட்டி விபரங்கள் குறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில், 26.01.2011 குடியரசு தினத்தன்று பட்டம் பறக்க விடும் போட்டி வழமை போல் நடத்தப்படவுள்ளது.
3 பிரிவுகளாக நடத்தப்படவுள்ள இப்போட்டி குறித்த விபரங்கள் பின்வருமாறு:-
பிரிவு 1:
போட்டி நேரம்: காலை 10.00 மணி
நுழைவுத்தகுதி: 2 அடிக்கு உட்பட்ட பட்டங்கள் (உள்ளூர் சிறுவர்களுக்கு மட்டும்)
நுழைவுக் கட்டணம்: ரூ.50
முதல் பரிசு: ரூ.1,000
இரண்டாம் பரிசு: ரூ.500
மூன்றாம் பரிசு: ரூ.250
பிரிவு 2:
போட்டி நேரம்: பிற்பகல் 02.00 மணி
நுழைவுத்தகுதி: 4 அடிக்கு உட்பட்ட பட்டங்கள்
நுழைவுக் கட்டணம்: ரூ.100
முதல் பரிசு: ரூ.2,000
இரண்டாம் பரிசு: ரூ.1,000
மூன்றாம் பரிசு: ரூ.500
பிரிவு 3:
போட்டி நேரம்: பிற்பகல் 03.00 மணி
நுழைவுத்தகுதி: 4 அடிக்கு மேற்பட்ட பட்டங்கள்
நுழைவுக் கட்டணம்: ரூ.100
முதல் பரிசு: ரூ.3,000
இரண்டாம் பரிசு: ரூ.2,000
மூன்றாம் பரிசு: ரூ.1,000
தகுதி மதிப்பெண்கள் விபரம்:
பட்டத்தின் அழகு (Beauty), வடிவமைப்பு (Shape), பறக்கும் தூரம் (Distance), பறக்கும் உயரம் (Height), இலுவை பலம் (Tension) ஆகியவற்றைக் கணக்கிட்டு நடுவர்கள் மதிப்பெண்களிடுவர்.
இம்மாதம் 24, 25 தேதிகளில் காலை 09.00 மணி முதல், ஐக்கிய விளையாட்டு சங்க (U.S.C.) அலுவலகத்தில் நுழைவுக் கட்டணம் செலுத்தி, பெயர் பதிவு செய்துகொள்ளலாம். பெயர் பதிவு செய்யாதவர்கள் கண்டிப்பாக போட்டிக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
உங்கள் திறமைக்கு ஒரு சவால் விடுக்கும் இப்போட்டியில் அனைவரும் கலந்துகொள்வீர்! பரிசுகளை வென்றிடுவீர்!!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |