மார்ச் 2010 இல் நடந்த பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வில் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் எடுத்த முஸ்லிம்
மாணவ, மாணவியர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி சென்னை வண்டலூரில் உள்ள பீ.எஸ்.அப்துர்ரஹ்மான் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று
நடைபெற்றது. இந்நிகழ்சிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ் நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் முஸ்லிம் மாணவ, மாணவியர் பெருந்திரளாக இவ்விழாவில் கலந்துக்கொண்டனர்.
காயல்பட்டணத்தில் இருந்தும் பல மாணவ, மாணவியர் இதில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் கலந்துக்கொண்டார். பீ.எஸ்.அப்துர்ரஹ்மான் பல்கலைக்கழக Pro-Chancellor அப்துல் காதிர் புஹாரி, எஸ்.சி.எம்.ஜமாலுதீன்
(தமிழ் நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புகைப்படங்கள்:
முத்து இஸ்மாயில்
தகவல்:
சாளை பஷீர் |