காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம், காயல்பட்டினம் அருணாசலபுரத்தில் ஒரு வார காலம் நடைபெற்று முடிந்துள்ளது. இம்முகாமில் சமூக நலன் குறித்த பல்வேறு பணிகளும், பொது நல மேடை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன.
முகாம் நிகழ்வுகள் குறித்து அக்கல்லூரியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
துவக்க விழா:
எமது வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண். 187இன் சிறப்பு முகாம் 31.12.2010 முதல் 06.01.2011 வரை நடைபெற்றது. முகாமின் முதல் நாள் தொடக்க விழாவாக ஆரம்பமானது.
அருணாசலபுரம் தேசிய தொடக்கப்பள்ளி மைதானத்தில் மாலை 06.30 மணிக்கு, எங்கள் கல்லூரியின் நிறுவனரும் காயல்பட்டணம் நகராட்சியின் தலைவருமான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில் தொடக்கவிழா நடைபெற்றது. அருணாசலபுரம் ஊர் தலைவர் திரு ஆர்.இராஜேந்திரன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். எம்மாணவி டி.அமல் பவுஸ்தின் பிரெடிமா வரவேற்புரை வழங்க, எஸ்.விஜி முகாம் விளக்கவுரை வாசித்தார். அதனைத் தொடர்ந்து எங்கள் கல்லூரி துணைச் செயலாளர் ஜனாப் டபிள்யு.எஸ்.ஏ.ஆர்.அஹ்மது இஸ்ஹாக் எம்.ஏ. அவர்களும் அருணாசலபுரத்தினைச் சேர்ந்த பணி ஒய்வு பெற்ற மாவட்ட துணை ஆட்சியர் திரு. எஸ்.ஜனார்த்தனன் பி.ஏ. அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். மாணவி செல்வி. எஸ்.சிவகாமி நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்:
இரண்டாம் நாள் காலை மணி 9.00 முதல் 1.00 வரை மற்றும் 2.00 முதல் 4.00 வரை மாணவியர் வீடுவீடாகச் சென்று சமூக பொருளாதார ஆரோக்கிய கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அருணாசலபுர ஊர் செயலாளர் திரு டி.முத்துராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இரவு 7.00 மணி பொதுக் கூட்டத்தில் பேயன்விளை கே.ஏ. மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை தமிழாசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்ற திரு.கு.குமரகுரு எம்.ஏ., எம்.எட்., அவர்கள் கண்தானம் பற்றி சிறப்புரையாற்றினார்கள்.
மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள்:
மூன்றாம் நாள் (02.01.11) அன்று காலை மணி 10.00க்கு சாத்தான்குளம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செல்வி. கே.மீனா அவர்கள் மாணவியரிடையே ஆளுமை பண்பு பற்றி கலந்துரையாடல் நடத்தினார்கள்.
மதியம் மணி 2.00 முதல் மணி 5.00 வரை பாளையங்கோட்டை சந்திரன் பல் மருத்துவமனையை நடத்தும் டாக்டர். பாலின் விஜயசந்திரன் அவர்கள் இலவச பல் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள். இம்முகாமில் 14 பெண்களும் சிறுவர் சிறுமியர் நால்வரும் ஆண் ஒருவரும் பயன்பெற்றனர். பல் சொத்தைக்கு ஆலோசனை பெறவே 75 சதவிகதம் பேர் வந்திருந்தனர்.
இரவு 7 மணி பொதுக்கூட்டத்திற்கு ஊர் துணைச் செயலாளர் திரு. எஸ்.இராம்குமார் தலைமை தாங்க திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பொருளியல் துறைத் தலைவர் திரு. கமல்ராஜ் அவர்கள் நாட்டு நலப்பணி திட்ட மாணவியரின் கடமை மற்றும் ஆரோக்கியமான இளைஞர்கள் யார் என்பன பற்றி சிறப்புரை வழங்கினார்கள்.
நான்காம் நாள் நிகழ்ச்சிகள்:
நான்காம் நாள் (03.01.11) அன்று காலை மணி 10.00 முதல் மதியம் 1.00 வரை ஊர் பொது கிணறு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பகுதி ஆகியவற்றை சுத்தம் செய்தனர்.
மதியம் மணி 2.00 முதல் 4.00 வரை எங்கள் கல்லூரி நிர்வாக அதிகாரியும் ஆதித்தனார் கல்லூரியின் பொருளியல் துறைத் தலைவராக பணியாற்றி ஒய்வு பெற்றவருமான டாக்டர் எம்.கம்சா முகைதீன் அவர்கள் மாணவியரிடையே தன்னம்பிக்கை என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நடத்தி மாணவியருக்கு போட்டி நடத்தினார்கள்.
அப்போட்டியில் எம் மாணவி வனகார்த்திகா பரிசு பெற்றார். இர்வு 7 மணிக்கு ஊர்சபை உறுப்பினர் திரு. எம்.சுதர்சனம் அவர்கள் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஆதித்தனார் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் திரு. கதிரேசன் நடுவராக செயல்பட சமூகம் சீரடைய பெரிதும் துணை நிற்பவர்கள் ஆண்களே! பெண்களே! என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இரு தர்ப்பிலும் எம்மாணவியர் வாதிட்டனர். சமுதாயம் சீரடைய பெரிதும் துணை நிற்பவர்கள் பெண்களே என்று நடுவர் தீர்ப்பு கூறினார்.
ஐந்தாம் நாள் நிகழ்ச்சிகள்:
ஐந்தாம் நாள் (04.01.11) காலை மணி 10.00 முதல் மதியம் 1.30 வரை தூத்துக்குடி வாசன் கண் மருத்துவ மனையும் எங்கள் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண். 187ம் இணைந்து இலவச கண் மருத்துவ முகாம் நடத்தினோம். அதில் ஆண்கள் 27 பேர் பெண்கள் 80 பேர் சிறுவர் சிறுமியர் 7 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அதில் 10 பேருக்கு சலுகை விலையில் கண் கண்ணாடி வழங்கினர். பெரும்பாலும் தலைவலி கண்பார்வை குறைபாடு கண்வலி போன்ற நோய்களுக்கு மருத்துவம் பெற வந்திருந்தனர். சிலர் ஆலோசனை பெறவும் வந்திருந்தனர்.
இரவு அருணாசலபுரம் தேசிய தொடக்கப்பள்ளி செயலாளர் திரு. சி.முத்தையா அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட மேலாளர் திரு இ.பாஸ்கர் பனிராஜன் அவர்கள் எயிட்ஸ் விழிப்புணர்வு பற்றி உரையாற்றினார்.
ஆறாம் நாள் நிகழ்ச்சிகள்:
ஆறாம் நாள் (05.01.11) காலை மணி 10.00 முதல் மதியம் 1.30 வரை அருணாசலபுர அம்மன் கோயில் வளாகத்தை சுத்தப்படுத்தினர்.
இரவு 7.00 மணி பொதுக்கூட்டத்திற்கு ஒய்வு பெற்ற துணை ஆட்சியர் திரு. எஸ். ஜனார்த்தனன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். வழக்கறிஞர்கள் டி.எட்வர்ட் சாத்ராக் எம்.முகமது உவைஸ், சதீஸ் பாலன் ஆகியோர் கலந்துகொண்டு சட்டமும் மனித உரிமைகளும் என்ற தலைப்பில் மனித உரிமைகள் பற்றி எடுத்துரைத்தனர். குற்றம் நடப்பதற்கு முன்பே அதனை தடுக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் மீறல்கள் பற்றியும் எடுத்துரைத்தனர்.
ஏழாம் நாள் நிகழ்ச்சிகள்:
ஏழாம் நாள் (06.01.11) அன்று காலை மணி 10.00 முதல் 12.00 வரை ஊர்மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 150 கன்றுகள் வழங்கப்பட்டன. மதியம் மணி 2.00 முதல் 3.30 வரை சமூக பொருளாதார ஆரோக்கிய கணக்கெடுப்பினை அலசி ஆராய்ந்தனர். அதில் 62மூ மக்கள் கட்டிடத் தொழிலாளர்கள். 12மூ மக்கள் அரசு பணியாளர்கள். மீதமுள்ள மக்கள் கூலி வேலை செய்பவர்கள். இவ்வூரில் 15-30 வயதிற்குட்பட்டவர்கள். இவர்களில் 60மூ மேல் உயர்நிலைப்பள்ளி படிப்பு மற்றும் தொழிற்கல்வி படித்துள்ளனர். 90மூ சொந்த வீடு உள்ளவர்கள். இவற்றில் கான்கிரீட் வீடும் கூரை வீடும் அடங்கும். 12 பேர் வங்கியில் கல்விக் கடன் வாங்கி உள்ளனர்.
மாலை 4.30 முதல் 5.30 வரை இவ்வூர் சிறுவர் சிறுமியர் பெண்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. மாலை ஆரோக்கியத்தினை வலியுறுத்தி மாணவியர பேரணி நடத்தினர்.
நிறைவு விழா:
மாலை மணி 6.30க்கு நிறைவு விழா நடைபெற்றது. நிறைவு விழாவில் கல்லூரியின் நிறுவனரும் காயல்பட்டணம் நகராட்சியின் தலைவருமான அல்ஹாஜ் வாவு எஸ்.செய்யது அப்துர் ரஹ்மான் தலைமை தாங்க கல்லூரி துணைச் செயலாளர் ஜனாப் டபிள்யு.எஸ்.ஏ.ஆர்.அஹ்மது இஸ்ஹாக் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். ஆதித்தனார் கல்லூரியின் விலங்கியல் துறை தலைவராக பணியாற்றி ஒய்வு பெற்ற திரு. ஜி.தங்கபாண்டியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
அருணாசலபுரம் வார்டு கவுன்சிலர் திரு. டி.திருத்துவராஜ் அவர்களும் தேசிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை திருமதி. சுகந்தி பால்ராஜ் அவர்களும் கல்லூரி நிர்வாக அதிகாரி டாக்டர் எம். கம்சா முகைதீன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்
இவ்வூரை சேர்ந்த 18 மாணவர்களுக்கு தினமும் கணினி பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கான கால நேரம் காலை 7.00 8.00 மாலை 4.30 5.30 5.30 6.30 என பகுக்கப்பட்டிருந்தது. தினமும் மாணவியருக்கு காலை 6.30 - 8.30 வரை திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி விளையாட்டுத் துறை பேராசிரியை திருமதி. கிறிஸ்டி அவர்கள் யோகா பயிற்சி அளித்தார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross