காயல்பட்டினம் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பெண்களை தொழில் முனைவோராக்கிடுவதற்கு புதிய வடிவமைப்பில் நல்ல செயல்திட்டம் விரைவில் வகுக்கப்படும் என, 01.01.2011 அன்று மாலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் 02.01.2011 அன்று மாலை 05.00 மணிக்கு, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியிலுள்ள எஸ்.ஏ.சுலைமான் ப்ளாக் வளாகத்தில் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட படி, நகரின் இரண்டு பைத்துல்மால்கள் உள்ளிட்ட பொதுநல அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் செயலர் வழக்குறைஞர் ஹாஜி எம்.ஐ.மீராஸாஹிப், கே.எம்.டி. மருத்துவமனை செயலர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், முஸ்லிம் லீக் நெல்லை மாவட்ட தலைவர் துராப்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். ஹாஃபிழ் எம்.ஏ.முஹம்மத் நூஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் கவுரவ செயலாளர் அ.வஹீதா வரவேற்றுப் பேசினார். தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் துவக்கப்பட்டதாகவும், மக்களிடம் போதிய விழிப்புணர்வின்மை காரணமாக அது உயிரோட்டமின்றி இருந்து வருவதாகவும், இனியேனும் முஸ்லிம் பெண்களுக்காக அரசு வழங்கி வரும் உதவிகளைப் பெற்றுக் கொடுத்திட நகரின் பொதுநல அமைப்புகள், அறக்கட்டளைகள், தனவந்தர்கள் முழுமையாக ஒத்துழைப்புகளையும், உதவிகளையும் வழங்கிட வேண்டும் என்றும் அவர் தனது வரவேற்புரையில் தெரிவித்தார்.
பின்னர், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் முத்துப்பேட்டை எம்.அப்துர்ரஹ்மான் எம்.பி. சிறப்புரையாற்றினார். அரசின் உதவித்திட்டங்கள், அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள், அரசு உதவிகளைப் பெறுவதில் சிறுபான்மை முஸ்லிம்களின் அலட்சியப் போக்கு, அரசு உதவிகளைப் பெற்றிட வேண்டியதன் அத்தியாவசியம் உள்ளிட்டவை குறித்து விளக்கிப் பேசிய அவர், சமுதாயத்திற்கு இது விஷயத்தில் தனது முழுமையான ஒத்துழைப்புகளைத் தர என்றும் ஆயத்தமாக உள்ளதாக தெரிவித்தார்.
பின்னர், தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க கூட்டமைப்பின் உறுப்பினர் ஹாஜி எஸ்.இப்னு சஊத் உரையாற்றினார். முஸ்லிம் பெண்கள் நலனுக்காக அரசால் தரப்பட்டிருக்கும் உதவித்திட்டங்களின் கீழ் அவற்றைப் பெற்றிடுவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகள், முறைமைகள் குறித்து தனதுரையில் விளக்கிப் பேசிய அவர், இத்திட்டத்தை செயல்படுத்தும் விஷயத்தில் காயல்பட்டினம் மட்டும் என்ற குறுகிய மனப்பான்மையோடு இருந்துவிடாமல், தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து முஸ்லிம் சமுதாயப் பெண்களுக்கும் இத்திட்டத்தைச் சென்றடையச் செய்ய வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.
பின்னர் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கான முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் பொறுப்பாளர் பொறியாளர் செய்யித் அஹ்மத் சிறப்புரையாற்றினார்.
சிறுபான்மை முஸ்லிம் பெண்களுக்கான அரசின் உதவித்திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கிப் பேசிய அவர், பிற மாவட்டங்களில் இத்திட்டம் சிறப்புற செயல்படுத்தப்பட்டு வரும் அதே நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் கூடுதல் அக்கறையுடன் இத்திட்டத்தை செயல்படுத்திட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் தனதுரையில் விவரித்தார்.
இத்திட்டத்தின் மூலம் பெண்களுக்கு தொழில், கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கான உதவிகளை நிறைவாகச் செய்திட இயலும் என்று கூறிய அவர், இதற்காக அரசு ஒரு மாவட்டத்திற்கு பத்து லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், இந்த உதவித்தொகை திட்டத்திற்காக நாம் பத்து லட்சம் ரூபாய் ஒதுக்கினால், அரசு தான் ஒதுக்கிய பத்து லட்சம் ரூபாயை வழங்கும் என்றும், இவ்விரு தொகைகளையும் சேர்த்து இருபது லட்சம் ரூபாயைக் கொண்டு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பெண்கள் சமுதாயத்திற்கு எண்ணற்ற உதவித்திட்டங்களை செயல்படுத்திட இயலும் என்று மேலும் தெரிவித்தார்.
பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களின் சந்தேகங்களுக்கு அவர் விளக்கங்களை அளித்தார். அதனைத் தொடர்ந்து, சில கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றது. இறுதியில், முஸ்லிம் பெண்களுக்கான அரசின் இந்த உதவித் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது என்றும், இத்திட்டங்களின் மூலம் வழங்கப்படும் உதவிகள் அனைத்தும் முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் மூலமாகவே வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த வகைக்காக நன்கொடையளிக்க விரும்புவோர் மேடையிலேயே தமது உதவித்தொகையை அறிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில்,
ஜித்தா காயல் நற்பணி மன்றம் சார்பாக ஹாஜி எஸ்.ஏ.ஸதக்கத்துல்லாஹ் ரூ.50,000 தொகையும்,
கரூர் ட்ரேடர்ஸ் சார்பாக ரூ.50,000 தொகையும்,
ஹாஜி எஸ்.இப்னு சஊத் ரூ.25,000 தொகையும்,
ஹாஜி எம்.எம்.உவைஸ் ரூ.25,000 தொகையும்,
இலங்கை புகாரீ அன் கோ ரூ.15,000 தொகையும்,
ஹாஜி காக்கா ரூ.10,000 தொகையும்,
ஹாஜி எஸ்.ஐ.அப்துல் காதிர் ப்ரதர்ஸ் ரூ.10,000 தொகையும்
வழங்குவதாக அறிவித்தனர்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் அரசு ஒதுக்கியுள்ள ரூபாய் பத்து லட்சம் தொகையையும் முழுமையாகப் பெற்றிடும் வகையில், மேலும் பத்து லட்சம் ரூபாயை நன்கொடைகள் மூலம் திரட்டுவது என்றும், உதவித்தொகைகளை பல்வேறு தனவந்தர்கள், உள்ளூர் - வெளியூர் - சென்னை, வெளிநாடுகளில் பணியாற்றும் கொடையாளர்களிடமும் கேட்டுப் பெறுவதென்றும், எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் அமைப்பின் தொகை குறித்து அரசுக்கு தெரிவிக்க வேண்டியிருப்பதால், இரண்டு மாதத்திற்குள்ளாக முழுத் தொகையையும் சேகரிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேற்படி நன்கொடைகளைத் திரட்டுவது, இதுகுறித்த இதர நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது ஆகியவற்றுக்கான குழுவினராக, அ.வஹீதா, ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், எஸ்.ஷேக் அப்துல் காதிர், ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, ஹாஜி எம்.என்.சுலைமான் ஆகியோரும்,
சென்னையிலிருந்து ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ஹாஜி எஸ்.இப்னு சஊத், ஹாஜி எல்.கே.கே.லெப்பைத்தம்பி, ஹாஜி எஸ்.எஸ்.எம்.ஸகத்கத்துல்லாஹ், ஹாஜி எஸ்.இம்தியாஸ், ஹாஜி டைமண்ட் செய்யித் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
இது தவிர, இந்த முஸ்லிம் பெண்கள் உதவும் அமைப்பிற்கு உறுப்பினர்கள் வரவேற்கப்படுவதாகவும், உறுப்பினர் ஆண்டுச் சந்தா ரூ.500; ஆயுள் சந்தா ரூ.1,000; புரவலர் தொகை ரூ.5,000 என்றும் அறிவிக்கப்பட்டது.
கூட்டத்திலேயே நாற்பது உறுப்பினர்கள் துவக்கமாக தமது பெயர்களைப் பதிவு செய்துகொண்டனர். தொடர்ந்து ஏனையோரையும் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தற்சமயம் காயல்பட்டினத்தில் இக்ராஃ கல்விச் சங்கம் அதன் நிர்வாக அதிகாரி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மதின் நேர்த்தியான ஒருங்கிணைப்பில் சிறப்பான முறையில் நிர்வகிக்கப்பட்டு வருவதால், இந்த முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தை நிர்வகிப்பதற்கும் அவரது ஒத்துழைப்பு முழுமையாகத் தேவைப்படுவதாகவும் ஹாஜி எஸ்.இப்னு சஊத், அ.வஹீதா ஆகியோர் இக்ராஃ நிர்வாக அதிகாரி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மதுவைக் கேட்டுக் கொண்டனர். அதற்கு தன்னாலியன்ற ஒத்துழைப்புகளை தனிப்பட்ட முறையில் நிறைவாகத் தருவதாக உறுதியளித்தார்.
இறுதியாக, ஹாஜி காக்கா நன்றி கூற, துஆவுடன் இரவு 08.30 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், ஹாஜி வாவு மஸ்னவீ, டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை, ஹாஜி ஜமால் முஹம்மத், ஹாஜி சின்னத்தம்பி, ஹாஜி எஸ்.எம்.உஸைர், ஹாஜி எல்.எஸ்.அன்வர், ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, ஹாஜி எஸ்.எம்.அமானுல்லாஹ், கம்பல் ஷாஹுல் ஹமீத், எம்.எஸ்.எம்.மாமுனா லெப்பை, ஏ.லெப்பை ஸாஹிப், ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி, காயல் மகபூப், ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ்,
ஹாஜி எம்.எம்.முஹம்மத் நூஹ், ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், ஆசிரியர் எம்.ஏ.ஹனீஃபா, ஹாஜி கத்தீப் மீராஸாஹிப், ஹாஜி முஹம்மத் ஹஸன் (கரூர் ட்ரேடர்ஸ்), ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார், ஹாஜி எம்.எஸ்.முஹம்மத் நூஹ் (கரூர் ட்ரேடர்ஸ்), ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் (கரூர் ட்ரேடர்ஸ்), கே.எம்.டி.சுலைமான், எஸ்.எம்.அஹ்மத் சுலைமான், ஹாஜி எஸ்.ஏ.பீர் முஹம்மத்,
ஹாஜி எம்.எம்.அஹ்மத் ஹுஸைன், எஸ்.கே.ஸாலிஹ், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், பா.மு.ஜலாலீ, ஹாஜி டி.எம்.எஸ்.சுல்தான், ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, ஹாஜி பி.எம்.ரஃபீக், ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத், எம்.எச்.செய்யித் முஹம்மத் ஸாலிஹ், ஹாஜி வாவு எம்.எம்.உவைஸ், ஹாஜி ஹாஜா அரபி, எஸ்.ஷேக் அப்துல் காதிர், ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம், ஹாஜி எம்.என்.இப்றாஹீம் மக்கீ, ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மறுநாள் 03.01.2011 அன்று காலை 11.00 மணிக்கு காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவிலுள்ள அ.வஹீதா இல்லத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டியின் ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது.
அ.வஹீதா, ஹாஜி சின்னத்தம்பி, ஹாஜி இப்னு சஊத், ஹாஜி காக்கா, ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, ஹாஜி எஸ்.ஐ.அப்துல் காதிர், ஹாஜி எஸ்.ஷேக் அப்துல் காதிர், ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோர் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
செய்தித் தொகுப்பு:
ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத்,
அப்பாபள்ளித் தெரு, காயல்பட்டினம். |