இந்திய அரசாங்கம் பிப்ரவரி 19, 1991 அன்று Coastal Regulation Zone (CRZ) Notification என்று
வழங்கப்படும் ஆணையை பிறப்பித்தது. கடந்த 20 ஆண்டுகளில் 25 மாற்றங்களை கண்டுள்ள இவ்வாணைக்கு பதிலாக மத்திய சுற்றுப்புற சூழல்
அமைச்சர் ஜெயராம் ரமேஷ் Coastal Regulation Zone (CRZ) Notification, 2011 மற்றும் Island Protection Zone (IPZ) Notification,
2011 என்ற இரு புது ஆணைகளை நேற்று அறிமுகப்படுத்தினார். கடந்த 18 மாதங்களில் மக்கள் மற்றும் நிபுணர்கள் உடன் மேற்கொள்ளப்பட்ட
கருத்து பரிமாற்றங்களுக்கு பிறகு இது உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் முன்வடிவு (Draft) கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
இந்த புது ஆணைகள் பல முக்கிய மாற்றங்களை கொண்டுள்ளது. பழைய ஆணையை போலவே CRZ கடலில் இருந்து 500 மீட்டர் வரை உள்ள
நிலபரப்பை கட்டுப்படுத்தும்.
பழைய ஆணையில் CRZ-4 என அறிவிக்கப்பட்டிருந்த அந்தமான் மற்றும் லச்சதீவுகள் தற்போது அப்பகுதிகளுக்கு என உருவாக்கப்பட்டுள்ள புது
ஆணையின் [Island Protection Zone (IPZ) Notification, 2011] கீழ் வருகின்றன.
CRZ-1 எது என்பதில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. CRZ-1 (i) விதிகள் இயற்கை வளமிக்கபகுதிகள், பறவைகள் சரணாலயம், வரலாற்று
சின்னங்கள் என பல (Ecologically Sensitive) கரையோர பகுதிகளுக்கு பொருந்தும்.
CRZ -2 என்பது கரையோரம் வரை கட்டுமான வளர்ச்சிக்கொண்டுள்ள பகுதியை குறிக்கும்.
கட்டுமான வளர்ச்சி குறைவாக உள்ள பகுதிகளும், CRZ -1 மற்றும் CRZ -2 பிரிவுகளில் அடங்காத பகுதிகளும் CRZ - 3 பிரிவை சாரும்.
முன்னர் அந்தமான் மற்றும் லச்சதீவுகள் பகுதிகளை குறித்த CRZ -4 தற்போது Low Tide Line (LTL) இல் இருந்து கடலுக்குள் 12 நாட்டிக்கல் மைல் வரை உள்ள
கடல் பகுதியை குறிக்கும்.
கட்டுப்பாடுகள்
CRZ-1 பகுதியில் (500 மீட்டர் வரை) எந்த கட்டுமானத்திற்கும் அனுமதி இல்லை. அணுமின் நிலையம் போன்ற சில விசயங்களுக்கு விதிவிலக்கு
வழங்கப்பட்டுள்ளது.
CRZ-2 பகுதியில் தற்போது உள்ள சாலை அல்லது கட்டுமானங்களில் இருந்து நிலம் நோக்கி (Landward Side) புது கட்டுமானங்கள்
அனுமதிக்கப்பட்டுள்ளன. இது தவிர உப்பு தண்ணீரை குடிநீராக மாற்றும் திட்டங்கள் போன்றவை அனுமதிக்கப்பட்டுள்ளன.
CRZ-3 பகுதியில் 0 - 200 மீட்டர் வரையிலான பகுதியில் எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளக்கூடாது (No Development Zone - NDZ). இருப்பினும்
மீனவர் உட்பட கரையோர சமுதாயங்கள் 100 - 200 மீட்டர் பகுதிகளில் உரிய பாதுகாப்புகளை ஏற்படுத்திக்கொண்ட பின்னர், அரசின் ஆணைகளுக்கு
பிரகாரம் கட்டுமானங்கள் மேற்கொள்ளலாம். மேலும் NDZ பகுதியில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றவை அனுமதிக்கப்பட்டுள்ளன. 200 - 500 மீட்டர் பகுதியில் புது கட்டிடங்கள் பாரம்பரியம் அடிப்படையில் (Traditional rights,
Customary uses) - சில கட்டுப்பாடுகளுக்குட்பட்டு௦ - அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் ஹோட்டல்கள், பயணியர் விடுதிகள் கட்டவும்
அனுமதிக்கப்பட்டுள்ளது.
CRZ-4 பகுதியில் மாசு கொண்ட கழிவு நீர்கள் போன்றவை வெளியிடப்பட கூடாது. இது குறித்த வரைமுறைகளை பரவலாக கருத்து கேட்கப்பட்டு ஓர்
ஆண்டுக்குள் வகுக்கவும் கூறப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross