ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றம் சார்பில் விரைவில் வெளியிடப்படவுள்ள சிறப்பு மலருக்கான படைப்புகளை அனுப்புவதற்கு கடந்த டிசம்பர் 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. படைப்புகளை அனுப்ப விரும்புவோரின் வேண்டுகோளை ஏற்று இக்கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மலர்க்குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மலர்க்குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பார்ந்த காயலர்க்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷாஅல்லாஹ் விரைவில் வெளிவரவிருக்கும் எமது அமீரக காயல் நல மன்றத்தின் சிறப்பு மலருக்காக படைப்புகளை அனுப்பி தந்த சகோதர சகோதரிகள், மாணவ மாணவியர் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறோம்.
அதே நேரத்தில், ஏராளமான காயலர்கள் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக எம்மைத் தொடர்புகொண்டு தத்தம் ஆக்கங்களை அனுப்பித் தர இன்னும் அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தவண்ணம் இருக்கிறார்கள்.
அனைவரது தகுதியுள்ள படைப்புகளுக்கும் வாய்ப்பளிக்கப் படவேண்டும் என்ற காரணத்தாலும், எமது மலரை மென்மேலும் அலங்கரிக்கும் ஆவலினாலும், படைப்புகளை அனுப்புவதற்கான இறுதி நாளை ஜனவரி 20 வரை நீட்டித்து இருக்கிறோம் என்பதை மலர்க்குழு சார்பில் அறியத்தருகிறோம்.
ஆதலால், இந்த நல்ல வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களது மேலான படைப்புகளை kayaluae.souvenir@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
அமீரக மலர்க்குழு சார்பாக,
கவிமகன் காதர்,
துபை, ஐக்கிய அரபு அமீரகம். |