காயல்பட்டணத்தில் புற்று நோய்க்கான ஆபத்து குறித்து குறும்படம் தயாரிக்க ஜித்தா காயல் நல மன்றம் திட்டமிட்டுள்ளது. இது குறித்த
ஆலோசனை கூட்டம் ஒன்று காயல்பட்டணத்தில் கடந்த டிசம்பர் 27 அன்று நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக சென்னையில் ஒரு ஆலோசனை கூட்டம் இன்று காலை - Aqua Base Consultants அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் ஜித்தா காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, காவாலங்கா பொதுக்குழு உறுப்பினர் தாஹா,
சென்னையில் இருந்து செயல்படும் Cancer Fact Finding Committee (CFFC) அங்கத்தினர் பல்லாக் சுலைமான், சாலை நவாஸ், முஹம்மது
சாலிஹு, ஷமீமுல் இஸ்லாம், குறும்பட நிபுணர் அருண், பத்திரிகை நிருபர் காதர் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் - தயாரிக்கப்பட உள்ள குறும்படத்தின் வடிவம், நீளம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறும்படத்தை விரைவில் வெளியடவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் CFFC மேற்கொள்ளும்
சோதனைகளின் முடிவுகள் குறும்பட தயாரிப்பு குழுவுடன் பகிர்ந்துகொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தகவல்:
சாலை நவாஸ்,
CFFC சென்னை ஒருங்கிணைப்பாளர். |