பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடிக்கு தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. இதற்கான முன் பதிவு நாளை மறுநாள் (ஜனவரி 9) துவங்குகிறது.
சென்னை எழும்பூர் - தூத்துக்குடி (மயிலாடுதுறை வழியாக)
சென்னையில் இருந்தது 06101 ரயில் ஜனவரி 12 புதன் அன்று இரவு 10:45 க்கு புறப்படும். தூத்துக்குடியை மறுநாள் மதியம் 12:30 சென்றடையும். தூத்துக்குடியில் இருந்து 06102 ரயில் ஜனவரி 13 வியாழன் அன்று மதியம் 3:45 க்கு புறப்பட்டு சென்னை எழும்பூரை மறுநாள் காலை 6:05 மணிக்கு அடைகிறது. இந்த ரயிலில் 1 2AC , 6 Sleeper Class , 6 General Class மற்றும் 2 Luggage - cum -Brake Van கோச்சுகள் இணைக்கபட்டிருக்கும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்படிரிபுளியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி,மீளவிட்டான் வழியாக இயக்கப்படும். சென்னை திரும்பும்போது மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்..
முன்னரே தென்னக ரயில்வே சென்னையில் இருந்து திருநேல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் அறிவித்துள்ளது.
தகவல்:
தென்னக ரயில்வே |