நகரில் ஸ்டேட் போர்டு மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடங்கள் பல உள்ளன. இருப்பினும், நகர எல்லைக்குள் DCW நிர்வாகத்தால் நடத்தப்படும் கமலாவதி மேல்நிலை பள்ளி மட்டுமே பத்தாம் வகுப்பு வரை CBSE பாட திட்டத்தை பயிற்றுவிக்கும் ஒரே பள்ளிக்கூடமாகும்.
நகரில் புதிதாக CBSE பாட திட்ட அடிப்படையில் பள்ளிக்கூடம் துவக்க பலர், பல ஆண்டுகளாக விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். அவ்வேளைகளில் எல்லாம், அதற்கு தடையாக கூறப்படும் பல காரணங்களில் ஒன்று ஒரு CBSE பள்ளிக்கூடம் இருக்கும் போது, அதற்கு மிக அருகில் மற்றொரு பள்ளிக்கூடம் துவக்க அனுமதி கிடைக்காது என்பது.
இது குறித்து புது டில்லியில் உள்ள CBSE தலைமை நிலையத்திடம் தகவல் அறியும் சட்டம் (Right to Information Act) கீழ் காயல்பட்டணம்.காம் வினா எழுப்பியது.
அதற்கு பதில் அளித்துள்ள CBSE வாரியம், இருபள்ளிகளுக்கு இடையே தூர அடிப்படையில் அனுமதி கொடுக்க எந்த தடையும் இல்லை என கூறியுள்ளது. |