இஸ்லாமிய குடும்பங்களுக்கான மாதந்திர நிகழ்ச்சி சவுதி அரேபியா தலைநகர் ரியாதில் உள்ள ரவ்தா அழைப்பு மற்றும் வழிக்காட்டி மையத்தில் ஜனவரி 7, வெள்ளியன்று - நடைபெற்றது.
மாலை 4 :30 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சியில் முதலில் பேசிய மௌலவி ரம்ஜான் பாரிஸ் மதானி - நபி (ஸல்) மற்றும் சஹாபாக்கள் காலகட்டத்தில் நிலவிய வறுமை குறித்து விளக்கி, மனிதர்கள் எப்போதும் தங்கள் நிலையைவிட கீழ் இருப்பவர்கள் நிலையை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும் என எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பேசிய மௌலவி தாசீக் அப்துல் கரீம் மதானி - இஸ்லாத்தில் குழந்தைகளுக்கான கல்வி குறித்தும், குழந்தைகளை மார்க்க பற்றுடன் வளர்ப்பது குறித்தும் விரிவாக பேசினார். ஏகத்துவம், நபி வரலாறு, சஹாபாக்கள் வரலாறு, சஹாபாக்கள் எவ்வாறு நபி மொழிக்கு மாறுசெய்யாமல் வாழ்ந்தார்கள், குரானை மனனம் செய்வது, தஜ்வீத் முறையில் குரானை ஓத தெரிவதன் முக்கியம் குறித்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எடுத்து கூறவேண்டும் எனவும் அறிவுறித்தினார்.
நடைபெற்ற பயானில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு சரியான பதில் அளித்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. கபார துவாவுடன் இஷா தொழுகைக்கு முன் நிகழ்சிகள் யாவும் நிறைவுற்றது. நிகழ்ச்சியில் காயலர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
தகவல்:
அபு அஹ்மத் சோனா (காட்டு தைக்க தெரு),
ரியாத், சவுதி அரேபியா. |