கடந்த வியாழன் அன்று (டிசம்பர் 30) - மக்கா, ஜித்தா உட்பட சவுதி அரேபியாவின் மேற்கு மாகாணத்தில் பலத்த மழை பெய்தது. சிறிது நேரமே பெய்த இந்த மழையினால் மக்காவில் 4 பேரும், மதினாவில் ஒருவரும் மரணம் அடைந்தனர்.
அவ்வேளையில் மக்காவில் ஹரம் ஷரீபிலும் மழை பெய்தது. அன்று லுஹர் வேளை துவக்கத்தில் சிறு துளிகளாக துவங்கிய மழை, தொழுகை முடியும் நேரத்தில் கனத்த மழையாக மாறியது. ஏறக்குறைய ஒரு மணி நேரம் பெய்த மழை மதியம் 1:30 மணிக்கு நின்றது.
அஸர் தொழுகை வேளையில் மழை பெய்ததற்கான சிறு அடையாளம் கூட இல்லாமல் அனைத்து பகுதிகளும் - கஃபா மீது போடப்பட்டுள்ள கிஸ்வா துணி உட்பட - சுத்தம் செய்யப்பட்டு உலர்ந்த நிலையில் இருந்தது.
அன்று உம்ராவுக்காக சென்றிருந்த காயலர்கள் எடுத்த வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகள்:
வீடியோ காட்சியை காண இங்கு அழுத்தவும்
புகைப்படங்கள், வீடியோ மற்றும் தகவல்:
இப்னு சாகிப்,
தம்மாம், சவுதி அரேபியா.
|