64 நாடுகளில் இருந்து, 188 பேர் கலந்துக்கொண்ட 32 வது அகில உலக திருக்குர்ஆன் ஹிஃப்ழுப் போட்டிகள் கடந்த ஞாயிறு மக்காஹ் ஹரம் ஷரீபில் நிறைவுற்றன. இப்போட்டிகளின் நான்காவது பிரிவில் (10 ஜுஸ்உகள் பாட அளவைக் கொண்ட இப்பிரிவின் கீழ் பங்கேற்கும் போட்டியாளர்கள், கேட்கப்படும் வசனங்களை தஜ்வீதுடன் ஓத வேண்டும்) கலந்துக்கொண்ட காயல் இளவல் ஹாஃபிழ் பி.எஸ்.முஹம்மத் அமீனுக்கு வெற்றி கிட்டவில்லை. இந்த பிரிவில் 51 பேர் கலந்துக்கொண்டனர்.
போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளை மக்காஹ் மாகாண அமீர் இளவரசர் காலித் அல் பைசல் வழங்கினார். போட்டியில் சவுதி அரேபியா, குவைத், எமன், மொரோக்கோ, அல்ஜீரியா, லிப்யா, நைஜீரியா, நைஜேர், துர்கி மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து பங்குபெற்றோர் - பரிசுகளை வென்றனர்.
பரிசுகள் விபரம் வருமாறு:-
பிரிவு 1
முதல் பரிசு - சவுதி ரியால் 75,000
இரண்டாம் பரிசு - சவுதி ரியால் 72,000
மூன்றாம் பரிசு - சவுதி ரியால் 69,000
நான்காம் பரிசு - சவுதி ரியால் 66,000
ஐந்தாம் பரிசு - சவுதி ரியால் 63,000
பிரிவு 2
முதல் பரிசு - சவுதி ரியால் 55,000
இரண்டாம் பரிசு - சவுதி ரியால் 52,000
மூன்றாம் பரிசு - சவுதி ரியால் 49,000
நான்காம் பரிசு - சவுதி ரியால் 46,000
ஐந்தாம் பரிசு - சவுதி ரியால் 43,000
பிரிவு 3
முதல் பரிசு - சவுதி ரியால் 40,000
இரண்டாம் பரிசு - சவுதி ரியால் 37,000
மூன்றாம் பரிசு - சவுதி ரியால் 34,000
நான்காம் பரிசு - சவுதி ரியால் 31,000
ஐந்தாம் பரிசு - சவுதி ரியால் 28,000
பிரிவு 4
முதல் பரிசு - சவுதி ரியால் 25,000
இரண்டாம் பரிசு - சவுதி ரியால் 22,000
மூன்றாம் பரிசு - சவுதி ரியால் 19,000
நான்காம் பரிசு - சவுதி ரியால் 16,000
ஐந்தாம் பரிசு - சவுதி ரியால் 13,000
பிரிவு 5
முதல் பரிசு - சவுதி ரியால் 10,000
இரண்டாம் பரிசு - சவுதி ரியால் 8,000
மூன்றாம் பரிசு - சவுதி ரியால் 6,000
நான்காம் பரிசு - சவுதி ரியால் 5,000
ஐந்தாம் பரிசு - சவுதி ரியால் 4,000
|