காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையை நடத்தும் Kayalpatnam Medical Trust - KMT அறக்கட்டளையின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் 30.12.2010 அன்று மாலை 05.00 மணிக்கு, கே.எம்.டி. மருத்துவமனை கூட்ட அரங்கில் நடைபெற்றது.
அறக்கட்டளை தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ தலைமை தாங்கினார். ஹாஃபிழ் முஹம்மத் நூஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
பின்னர், அண்மையில் காலமான மர்ஹூம் எம்.எஸ்.அபுல் காஸிம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை ஹாஜி வாவு காதர் ஸாஹிப் முன்மொழிய ஹாஜி எஸ்.அக்பர்ஷா வழிமொழிந்தார். பின்னர் மர்ஹூம் அவர்களின் மறுமை நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சென்ற கூட்ட முடிவுகளையும், ஆண்டறிக்கையையும், அறக்கட்டளை செயலாளர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் சமர்ப்பித்தார்.
கடந்த ஓராண்டின் மருத்துவமனை வரவு-செலவு கணக்கறிக்கையை ஆடிட்டர் ரிஃபாயீ சமர்ப்பித்தார். சில சந்தேகங்களுக்கான விளக்கங்கள் பெறப்பட்ட பின், கூட்டம் அதனை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்களிடையே நீண்ட கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. இறுதியாக நன்றி கூறப்பட்டு, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் மருத்துவ அறக்கட்டளையின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
|