காயல்பட்டினம் கடற்கரையில் வீடு கட்டும் பணியை நிறுத்தக்கோரி
காயல்பட்டினத்தில் இன்று கடையடைப்பு நடக்கிறது. காயல்பட்டினம் கற்புடையார்பள்ளி வட்டம் பகுதியில் புதிய வீடுகள் கட்டி வெளியூர் மக்களை குடியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் முழுகடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் இன்று (4ம்தேதி) நடக்கிறது.
காயல்பட்டினம் கடற்கரை கற்புடையார் பள்ளிவட்டம் பகுதியில் 169 வீடுகளை கட்டி அதில் வெளியூர் மக்களை குடியேற்ற அரசு தரப்பில் முயற்சி நடக்கிறது. வீடு கட்டும் பணியை நிறுத்த கோரி காயல்பட்டினம் நகராட்சியில் கடந்த 31ம் தேதி அவசர கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
காயல்பட்டினம் கடற்கரையில் மோசடி கிரையம் செய்யப்பட்ட இடத்தில் 169 வீடுகளை கட்டி வெளியிடங்களிலிருந்து குடியேற்றும் சதி நடக்கிறது. காயல்பட்டினம் மக்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு நகராட்சியில் ஒப்புதல் கூட பெறாமல் நடக்கும் இச்செயலை கண்டித்து காயல்பட்டினம் ஊர் பொதுமக்கள் சார்பில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடையடைப்பு போராட்டம், மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
1. நல்லதோர் முயற்சி posted bymauroof (Dubai)[04 January 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2001
கடை அடைப்பு மற்றும் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஊரில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இதில் கலந்துகொள்ள வேண்டும். இது ஒட்டுமொத்த காயல்மாநகரின் பிரச்சனை.
2. Protest posted byA.M. Syed Ahmed (Riyadh - KSA)[04 January 2011] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2002
Good to protest by saying State GOVT. If the Housing Project expansion not stopped, we will boycott the forthcoming May - Twenty Eleven assembly election like paapaa patti and keeri patti (THEN CENTER GOVT. WILL INVOLVE)
Don't allow the KALIGHNAR PATTINAM? become KAAVI PATTINAM.
3. ஓற்றுமையிலேயே வெற்றி posted byABDUL WADOOD (JAIPUR)[04 January 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 2003
அல் ஹம்துலில்லாஹ் மிக்க மகிழ்;ச்சியான செய்தி. நம் முயற்ச்சியை வல்ல நாயன் வெற்றி பெறச்செய்வானாக ஆமீன். நம் காயல் பட்டணம் மக்கள் அனைவருக்கும் நம் ஐக்கிய பேரவைக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் கருத்து வேறுபாடின்றி ஒத்துழைப்பு நல்குமாறு அன்பாக வேண்டிக்கொள்கின்றேன். ஒற்றுமையிலேயேதான் வெற்றி உள்ளது
4. ILLEGAL SETTLEMENT posted byNOOHU SAHIB (DUBAI)[04 January 2011] IP: 80.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2004
WE SHOULD FIGHT UNTIL THE END. THE OTHERSIDE WILL ALSO GO FOR LEGAL ACTION FOR OUR PROTEST. WE SHOULD NOT LOOSE OUR COURAGE. MAY ALLAH WILL GIVE VICTORY IN THIS ISSUE.WE PRAY FOR THAT.
5. ஒற்றுமைக்கு போட்ட முதல் வித்து...... posted bys.s.md meera sahib (riyadh)[05 January 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2034
அஸ்ஸலாமு அலைக்கும். எல்லோரும் ஒன்று பட்டு இருப்பதை பார்க்கும்போது ரெம்ப சந்தோஷமாக உள்ளது. "ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றிப்பிடியுங்கள்" (நபி மொழி) இறைவன். நமக்கு எதிராக பின்னப்படும் சூழ்ச்சியை கண்டிப்பாக முறியடிப்பான். சூழ்ச்சியில் இருந்து பாதுகாக்க இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போமாக. காயலர் ஒற்றுமைக்கு போட்ட முதல் வித்துக்கு சொந்தக்காரர்களான ஐக்கிய பேரவைக்கு மனமார்ந்த நன்றிகள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross