அமெரிக்காவில் ஆண்டுதோறும் 'BRAVE NEW VOICES’ எனும் பெயரில் நடத்தப்படும் 'கவிதை ஓப்புவித்தல்' (Poetry Slam) போட்டியை போல் சென்னை அமெரிக்க துணை தூதரகமும், பிரக்கிருத்தி அமைப்பும் இணைந்து கடந்த டிசம்பர் 20ஆம் தேதி சென்னையில் நடத்தின. இந்த சுயகவிதைப் போட்டிக்கு கவிஞர் ஹோசங் மெர்சண்ட், கவிஞரும், சமூக சேவகியுமான சல்மா, அமெரிக்க தூதரக பிரதிநிதி அலிசா எம்.கரெல்லா ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். 70 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ /மாணவிகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் காயல்பட்டினத்தை சார்ந்த A.R. ஹபிபத் ஃபாயிசா 'நடைப்பிணம்' என்ற தலைப்பின் கீழ் அழகிய ஆங்கில நடையில் கவிதைப்படைத்து கல்லூரி மாணவ/மாணவி அளவில் முதல் பரிசை (College - English/Audience Favorite) தட்டிச் சென்றார். இம்மாணவி சென்னை MEASI Institute of Management இல் M.B.A. படித்து வருகிறார்.
இந்நிகழ்ச்சி குறித்த அதிக தகவல் அமெரிக்க தூதரக இணையதளத்தில் காண இங்கு அழுத்தவும்.
சென்ற செப்டம்பர் 21ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் நடந்த பெரியார் 'சமுதாய சீர்த்திருத்தவாதியா? சமுதாய புரட்சியாளரா?' என்ற
தலைப்பின் கீழ் நடந்த ஆங்கில பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் இரண்டாம் பரிசை இவர் வென்றது குறிப்பிடத்தக்கது.
இம்மாணவி தீவுத் தெருவைச் சேர்ந்த மர்ஹீம் A.K. செய்து அகமது ஹாஜியின் பேத்தியும், தம்மாம் காயல் நலமன்ற செயலாலர் S.A. அஹமது
ரபீக் அவர்களின் மகளும் ஆவார்.
தகவல்:
இப்னு சாகிப்,
தம்மாம், சவுதி அரேபியா
|