இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை நிறுவனம் சார்பில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் ஆகிய தென்மாவட்டங்கள் அளவிலான திருக்குர்ஆன் ஓதல் - கிராஅத் சுற்றுப் போட்டி பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி கேளரங்கில் நடைபெற்றது. அப்போட்டியில் வென்ற காயல்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் மாணவ-மாணவியர் இறுதிப்போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
27.12.2010 அன்று கீழக்கரை கண்ணாடி வாப்பா மாளிகையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், அனைத்துப் பிரிவுகளிலும் காயல்பட்டினத்தைச் சார்ந்த மாணவ-மாணவியரும் வென்றுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் பிரிவில் காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர் ஹாஃபிழ் அப்துல் காதிர் வாஃபிக் முதலிடம் பெற்றுள்ளார்.
பள்ளி மாணவியர் பிரிவில், உம்மு உமாரா முதல் பரிசும், ஜீனத் முனவ்வரா இரண்டாம் பரிசும் பெற்றுள்ளனர்.
கல்லூரி மாணவர்கள் பிரிவில் முஹம்மத் ஸலீம் முதலிடம் பெற்றுள்ளார்.
அரபிக்கல்லூரி மாணவர்கள் பிரிவில் கமருத்தீன் காதிரீ இரண்டாமிடமும் பெற்றுள்ளார்.
அரபிக்கல்லூரி மாணவியர் பிரிவில் செய்யித் அஜீபா முதலிடமும், முத்து ரியாஸ் ஃபாத்திமா இரண்டாமிடமும் பெற்றுள்ளனர்.
காயல்பட்டினத்திலிருந்து போட்டியில் கலந்துகொண்டு வென்றவர்களின் பட்டியல் மட்டும் இச்செய்தியில் தரப்பட்டுள்ளது.
போட்டிகளில் வென்ற அனைவருக்கும் சிறப்புப் பரிசுகளும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவியருக்கும் இறைத்தூதர் நபிகள் யாகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிய சரித்திர நூல் ஒன்றும், ஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மான் வரலாற்று சுயசரிதை புத்தகமும், ரூபாய் 500 பணப்பரிசும், பேனா, போக்குவரத்துச் செலவுகளும், சிற்றுண்டி - மதிய உணவும் வழங்கப்பட்டது.
தகவல் மற்றும் படங்கள்:
ஹாஃபிழ் A.W.முஹம்மத் அப்துல் காதிர் புகாரீ மூலமாக,
ஹாஃபிழ் முஹம்மத் இன்ஆமுல் ஹஸன்,
நிர்வாக அலுவலர், இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை, சென்னை. |