காயல்பட்டினம் சதுக்கைத் தெரு - குத்துக்கல் தெரு இடையேயுள்ள - நகராட்சி மன்றத்திற்குச் செல்லும் இடைச்சாலையில் நேற்று மாலை 05.45 மணிக்கு கண்ட காட்சிகள்தான் இவை!
நகரில் இறைச்சிக் கோழி (ப்ராய்லர் கோழி) விற்பனை செய்யும் ஒரு கடையைச் சார்ந்தவர், தன் கடையில் தானாக இறந்துவிட்ட கோழிகள் இரண்டை, நகராட்சி மன்றத்தின் கோட்டைச் சுவரையொட்டிய - அள்ளப்படாத குப்பையில் போட்டுவிட்டுச் சென்றுள்ளார்.
பசியுடன் அங்கு வந்த கருநாயொன்று பார்த்த மாத்திரத்தில் சிக்கனைப் பதம் பார்க்கத் துவங்கியது. குப்பையிலிருந்து கோழியைக் கவ்விக் கொண்டு சாலையின் நடுப்பகுதியில் வைத்து சாப்பிடுவதும், மனிதர்கள் வரும்போது மீண்டும் தனதிரையை குப்பைக்கே இடமாற்றம் செய்வதும் பல நிமிடங்கள் தொடராக அரங்கேறிய காட்சி!
நாயாருக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்ய வேண்டி வருமோ...?
1. Health and envirnmental posted byM.E.Shaik (Dubai UAE)[02 January 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1958
We have to compain to Municpality to take action for the violation of health and environmental to whoever does this type of nasty work. We have to keep the area clean and hygenic sothat toavoid dieses prevailing in Kayalpatnam
3. Need to educate posted byA.W.S. (Kayalpatnam)[02 January 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 1962
What we saw in this page save dog & dead chicken is nothing new. Our Panjayath Trash Truck (Garbage truck) picks up these garbages on a routine basis.
Yet our womenfolks and in many cases our maids are too busy working that they can not wait for the truck, bring these garbages well before the truck arrives and just leave at the street.
Few minutes later stray dogs, our domestic animals waiting feast, out of hunger pierce open the trash bags and eat whatever satisfy their taste buds and leave behind the leftovers.
Poor crows drag the bags do what they are best at and fill their stomachs. The result, garbages are littered all over the street.
5. சுத்தம் ஈமானில் பாதியாகும்.நபிமொழி. posted byMoulavi.Msk mahlari.Singapore. (Singapore.)[02 January 2011] IP: 49.*.*.* Singapore | Comment Reference Number: 1964
இந்த காட்சிகள் நமது நகரத்தின் சுகாதார கேட்டை வுருவாக்கி,பல்வேறுவிதமான நோய்,நொடிகள் ஏற்பட காரணமாக ஆகிவிடுகிறது.ஆகவே நகர்மன்றம் வுடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும்,பொதுவாக வூர்மக்களும்,குறிப்பாக அப்பகுதி மக்களும்,துப்பரவு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்கும்படியும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
8. NECESSARY STEPS FOR CLEANLINESS posted byL.A.K.BUHARY (Hong Kong)[02 January 2011] IP: 182.*.*.* Hong Kong | Comment Reference Number: 1974
நகராட்சி நிர்வாகமும்,உலகளாவிய காயல் நல மன்றங்களும் இணைந்து வெளிநாட்டில் உபயோகிப்பது போன்று garbage bags மொத்தமாக இறக்குமதி செய்து அல்லது உள்நாட்டிலேயே வாங்கியோ, அதன் பின்னர் பகுதி வாரியாக சுற்றுப்புற சூழல் சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி,அதை இலவசமாகவோ அலல்து சலுகை விலையிலோ விற்பனை செய்து அதை பயன்படுத்துவதன் நோக்கம் ,பயன்படுத்தும் முறை,அதனால் நமக்கும் கிடைக்க பெரும் நன்மைகள் பற்றி விளக்கி சொல்லி,பயிற்சி கொடுத்து நடைமுறை படுத்தி பார்க்கலாம்.தற்காலத்தில் நமதூர் பெண்களில் பெரும்பான்மையினர் வெளிநாட்டில் வசித்தவர்கலாகவோ அல்லது சுற்றுபயணம் செய்தவர்களாகவோ தான் அனுபவம் பெற்று இருப்பர். அவர்களில் சிலரை கொண்டு மகளிர் கருத்தரங்கு நடத்தி நடை முறை படுத்தலாம். இதன் மூலம் துப்புரவு பணியாளர்களுக்கும் அதை அப்படியே தூக்கி சென்று அப்புறப்படுத்துவது எளிது(ரோடு பெருக்கி பெருக்கி நேரம் தான் வீண்). இதில் என்ன ஒரு சிக்கல் என்றால் ,விநியோகம் செய்யப்பட பைகளை அப்படியே லவட்டி கொண்டு போயி வீட்டில் உள்ள பழைய புளிமூட்டை துணிகளை கட்டி பரண் ல வீசுவதற்கும் அல்லது வேறு என்னவாது பயன்பாட்டிற்கும் போயீவிடாதவாறு குப்பைகளுக்கு மட்டுமே பிரத்தியோகமாக பயன்படுத்துவதுக்கு என்றும் கட்டாயமாக பயிற்சி கொடுக்கப்படவேண்டும்,..!!! ஆரம்பத்தில் சிரமம் தான் ..அப்புறம் ஒரு ஆறு மாதம் கழித்து சிறிதளவேனும் முன்னேற்றம் தென்படும்..ஏனென்றால் வெளிநாடுகளிலும் இதை தானே நாம் செய்கிறோம்..?ஏன் அங்கே செய்ய முடியவில்லை...!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross