பொங்கலை முன்னிட்டு திருநெல்வேலிக்கு தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு ரயிலும், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு ரயிலும் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன் பதிவு நாளை (ஜனவரி 8) துவங்குகிறது.
(1) சென்னை சென்ட்ரல் - திருநெல்வேலி - சென்னை சென்ட்ரல் கரிப் ரத் (Garib Rath)
சென்னையில் இருந்து 06009 ரயில் ஜனவரி 12 புதன் அன்று இரவு 7:30 க்கு புறப்படுகிறது. திருநெல்வேலியை மறுநாள் காலை 9:35 க்கு அடைகிறது. திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 13 வியாழன் அன்று மதியம் 2:55 க்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலை மறுநாள் காலை 5:00 மணிக்கு அடைகிறது. இந்த ரயில் 13 - 3AC கோச்சுகளை கொண்டு இயக்கப்படும். சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி வழியாக இயக்கப்படும். சென்னை திரும்பும்போது மாம்பலம் ரயில் நிலையத்திலும் நிற்கும்.
(2) சென்னை எழும்பூர் - திருநெல்வேலி (மயிலாடுதுறை வழியாக)
சென்னையில் இருந்தது 06103 ரயில் ஜனவரி 15 சனி அன்று இரவு 10:45 க்கு புறப்படும். திருநெல்வேலியை மறுநாள் மதியம் 12:15 சென்றடையும். இந்த ரயிலில் 1 2AC , 6 Sleeper Class , 6 General Class மற்றும் 2 Luggage - cum -Brake Van கோச்சுகள் இணைக்கபட்டிருக்கும். தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், திருப்படிரிபுளியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி வழியாக இயக்கப்படும். சென்னை திரும்பும்போது மயிலாடுதுறை செல்லாமல் விருதாசலம் வழியாக செல்லும்.
(3) திருநெல்வேலி - சென்னை எழும்பூர் (விருதாசலம் வழியாக)
திருநெல்வேலியில் இருந்து 06104 ரயில் ஜனவரி 16 ஞாயிறு அன்று மதியம் 2:55 க்கு புறப்பட்டு சென்னை எழும்பூரை மறுநாள் காலை 4:25 மணிக்கு அடைகிறது. இந்த ரயிலில் 1 2AC , 6 Sleeper Class , 6 General Class மற்றும் 2 Luggage - cum -Brake Van கோச்சுகள் இணைக்கபட்டிருக்கும். வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விருதாசலம், விழப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் வழியாக இயக்கப்படும்.
தகவல்:
தென்னக ரயில்வே |