காயல்பட்டினத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் சுனாமி குடியிருப்புகள் குறித்து தி ஹிந்து நாளிதழ்
இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது :-
[தூத்துக்குடி] சிங்கித்துறையை சார்ந்த கடலோர கிரமாவாசிகளுக்கான குடியிருப்புகள் குறித்த மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பினை தொடர்ந்து மீனவர்கள்
மகிழ்ச்சியில் உள்ளனர்.
மீனவர்களின் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு முன்னிலை வகித்த மாவட்ட வருவாய்துறை அதிகாரி டீ. ரவிச்சந்திரன் - அரசின் உத்தரவுகள்படி அனைத்து
வீடுகளும் அமைக்கப்படும் என தெரிவித்தார். சமீபத்தில் காயல்பட்டின நகரவாசிகள் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான குடியிருப்புகளுக்கு
எதிர்ப்பு தெரிவித்தனர். இது (கட்டிடப்பணி) அன்னியர்கள் குடியேற வழிவகுக்கும் எனக்கூறி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கொம்புதுறை மற்றும் சிங்கித்துறை மீனவர்கள் பல ஆண்டுகளாக மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தூத்துக்குடி நாட்டு படகு மீனவர்கள்
சங்கத் தலைவர் எஸ்.ஜி.கயேஸ் கூறினார்.
அவர்களிடம் குடும்ப அட்டையும், வாக்காளர் அட்டையும் உள்ளது. அப்போது ஏன் காயல்பட்டினவாசிகள் குடியிருப்பு கட்டுமான பணிகளை
எதிர்க்கவேண்டும் என அவர் வினவினார்.
இவ்வாறு இன்றைய தி ஹிந்து நாளிதழின் மதுரை பதிப்பில் செய்தி வெளியாகி உள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross