கத்தர் காயல் நல மன்றத்திற்கு புதிய நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டும் பள்ளிச் சீருடை இலவச வினியோகம், வரும் கல்வியாண்டில் கல்லூரி மாணவர்கள் மூவருக்கு இக்ராஃ மூலம் புதிதாக கல்வி உதவித்தொகை, வரும் பிப்ரவரி மாதம் 19, 20 தேதிகளில் புற்றுநோய் பரிசோதனை முகாம் உள்ளிட்டவற்றை செயல்படுத்துவதென அம்மன்றத்தின் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கத்தர காயல் நலமன்றத்தின் 34ஆவது செயற்குழுக் கூட்டம் 07.01.2011 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின் மதியம் 01.00 மணியளவில், காயல் நண்பரகள் இல்லத்தில் நடைபெற்றது. மன்றத் தலைவர் ஹாஜி எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
புதிய நிர்வாகக் குழு:
மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களுக்கு பின்வருமாறு பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டன:-
தலைவர்:
எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம்
துணைத்தலைவர்கள்:
முஹம்மத் யூனுஸ்
வி.எம்.டி.அப்துல்லாஹ்
செயலாளர்:
செய்யித் முஹ்யித்தீன்
துணைச் செயலாளர்கள்:
கே.எம்.மீரான்
முஹம்மத் முஹ்யித்தீன்
பொருளாளர்:
எம்.ஆர்.ஷாஹுல் ஹமீத்
துணைப் பொருளாளர்கள்:
முஹ்யித்தீன் தம்பி
ஏ.எச்.எஸ்.ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன்
கல்வித் துறை:
டி.ஃபைஸல் ரஹ்மான்
மருத்துவத் துறை:
எம்.எஸ்.நூர் முஹம்மத்
மேற்கண்டவாறு மன்றத்தின் நிர்வாகப் பொறுப்புகள் செயற்குழு உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
பின்னர், மன்றத் தலைவர் உரையாற்றுகையில், கடந்த டிசம்பர் 2010 வரை மன்றத்தால் செய்யப்பட்டுள்ள செயல்திட்டங்கள் குறித்து விளக்கினார். அதனைத் தொடர்ந்து விவாதித்து முடிவெடுக்கப்பட்ட அம்சங்கள் பின்வருமாறு:-
புற்றுநோய் பரிசோதனை முகாம்:
வரும் பிப்ரவரி மாதம் 19, 20 தேதிகளில் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புடன் இணைந்து Cancer Fact Finding Committee - CFFCயின் உதவியுடன் நகரில் புற்றுநோய் தடுப்பு பரிசோதனை முகாம் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.
பள்ளிச் சீருடை இலவச வினியோகம், கல்வி உதவித்தொகை:
மேலும் வரும் கல்வியாண்டில் ஆறாம், எட்டாம், ஒன்பதாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ-மாணவியருக்கு இக்ராஃ மூலம் சீருடை வழங்குவதென்றும்,
சென்ற ஆண்டுகளைப் போல வரும் கல்வியாண்டிலும் இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூலம் மேலும் 3 மாணவர்களுக்கு புதிதாக கல்வி உதவித்தொகை வழங்குவதென்றும் நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின் தீர்மானிக்கப்பட்டது.
வினாடி-வினா போட்டி:
கடந்த ஆண்டைப் போல இவ்வாண்டும் பள்ளி மாணவ-மாணவியருக்கான வினாடி-வினா போட்டியை சிறப்புற நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
இறுதியாக துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
K.M.மீரான்,
மக்கள் தொடர்பாளர்,
காயல் நல மன்றம்,
தோஹா, கத்தர். |