பொது வினியோகத் திட்டம் சிறப்பாக நடைபெறுவதற்காக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும், பொது வினியோகத் திட்டம் சம்பந்தப்பட்ட குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில், பொது வினியோகத் திட்டம் தொடர்பான விபரங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம்.
காயல்பட்டினம் 12ஆம் வார்டு பொதுமக்களுக்காக, 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான பொது வினியோகத் திட்ட குறை தீர்க்கும் நாள் 13.01.2011 அன்று காலை 10.00 மணிக்கு, திருச்செந்தூர் கோட்டாட்சியர் மேற்பார்வையில் நடைபெறவுள்ளது.
அந்த வார்டைச் சார்ந்த பொதுமக்கள், பொது வினியோகத் திட்டம் தொடர்பான மனுக்களைக் கொடுத்து பயன் பெறலாம் என்றும், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் முதலிய மனுக்களுக்கு முகாம் தினத்தன்றே தீர்வு செய்யப்படும் என்றும், இதர மனுக்களுக்கு 15 தினங்களுக்குள் பதில் தெரிவிக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. |