நெல்லை & சென்னை வழித்தடத்தில் இன்று, நாளை இயக்கப்படவுள்ள பொங்கல் சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதில் செங்கோட்டையிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு விருதாசலம், சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் (வ.எண்.06012) இன்று (12.1.2011) மதியம் 2.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 5.40 மணியளவில் செங்கோட்டையிலிருந்து புறப்படும். இதனால் இந்த ரயில் மதுரைக்கு 9 மணிக்கு செல்லும். சென்னை சென்ட்ரலுக்கு காலை 7 மணியளவில் வந்து சேரும்.
இதையடுத்து சென்னை சென்ட்ரலிருந்து நெல்லை வரும் ஏழைகள் ரதம் சிறப்பு ரயில் (வ.எண்.06009) இன்று (12.1.2011) இரவு 7.30 மணிக்கு சென்னை சென்ட்ரலிருந்து புறப்படுவதற்கு பதிலாக இரவு 8.40 மணிக்கு புறப்படும். இதனால் இந்த ரயில் மறுநாள் காலை 6.40 மணிக்கு வருவதற்கு பதில் காலை 7.55க்கு வரும். நெல்லைக்கு மறுநாள் (13.1.2011) முற்பகல் 11.45 மணிக்கு வந்து சேரும்.
நெல்லையிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு நாளை (13.1.2011) இயக்கப்படவுள்ள ஏழைகள் ரதம் சிறப்பு ரயில் (வ.எண். 06010) மதியம் 2.55 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 5.30 மணிக்கு புறப்படும். இதனால் இந்த ரயில் மதுரைக்கு அன்று இரவு 8.10க்கு சென்று சென்னை சென்ட்ரலுக்கு மறுநாள் காலை 7.15க்கு வந்து சேரும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross