அலைப்பேசி மற்றும் அலைப்பேசி கோபுரங்கள் மூலம் மனிதர்களுக்கு பல வகையான ஆபத்துக்கள் உள்ளதாக டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. இந்திய அரசாங்க பொருளாதார உதவி மூலம் - ஆண் எலிகள் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியை தலைமை தாங்கி நடத்திய பேராசிரியர் ஜிதேந்திர பிஹாரி - இந்த ஆய்வு முடிவுகள் மனிதர்களுக்கும் பொருந்தும் என்றும், இம்முடிவுகள் மேற்கத்திய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுடன் ஒத்துப்போவதாகவும் தெரிவித்தார்.
மருத்துவ பாதிப்புகளாக ஆண்மை குறைவு, இருதய நோய், புற்று நோய், முட்டு வலி, விரைவில் வயதானவர் போல் தோற்றம் கொள்வது ஆகியவைகளை அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வு குறித்த மேலதிக தகவல் காண இங்கு அழுத்தவும்.
தகவல்:
குளம் கே.எஸ்.முஹம்மது யூனுஸ்,
சென்னை.
|