இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த 10ம் வகுப்பு வரை படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவியருக்கான ஊக்கத்தொகை (Pre-matric Scholarships) 2008-2009 ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் மத்திய அரசு 75 சதவீதம் என்றும், மாநில அரசு 25 சதவீதம் என்றும் பங்களிக்கின்றன.
இத்திட்டத்திற்காக ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தில் (2007-2012) 25 லட்சம் மாணவ, மாணவியருக்கு 1400 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 30 சதவீதம் மாணவியருக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய சிறுபான்மை அமைச்சகம் 2010 -2011 ஆம் ஆண்டுக்கு 20 லட்சம் பேருக்கு ஊக்கத்தொகை வழங்க இலக்கு வைத்திருந்தது. டிசம்பர் 31, 2010 வரை இலக்கினை தாண்டி 34 லட்சம் பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இவ்வகைக்காக இவ்வாண்டு 343.54 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு 17.29 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross