ஜித்தா - சஊதி அரபிய்யா, ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி நலக்குழு வெளியிட்ட இரங்கல் அறிக்கை:-
சகோ. எஸ்.கே.எஸ். அவர்களின் மரண செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியுற்றோம். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். நம் சமூகத்தின் நடமாடும் பல்கலையாக திகழ்ந்த அவர் நிரந்தர ஓய்வுக்கு சென்றுவிட்டார். ஆம்...! அவரின் அந்த ஓய்வு நம் நகரின் எதிர்கால வடிவமைப்பு பணிக்கு ஒரு சாய்வு என்றே சொல்ல வேண்டும். அவரின் பல மொழித்திறனறிந்து வியந்தோம். அவர் பேசும் தூய தமிழ் நடைகண்டு நெகிழ்ந்தோம். அவரின் நுனி நாவில் தவழும் ஆங்கிலப் புலமைக்கண்டு மகிழ்ந்தோம். மாற்று மத அன்பர்களையும் அரவணைத்து நகரில் சமூக நல்லிணக்கத்தை விதைத்த நல்லவர். சிறாரோடு சிறாராக அமர்ந்து கறாராக கற்றுக்கொடுக்கும் கணியவர். அகராதிக்கே அகரம் சொல்லும் அற்புதமானவர்..... சென்று விட்டார் நம்மை பிரிந்து!
சுறுசுறுப்பாக சுற்றி வந்தவர். அல் ஜாமிஉல் அஸ்ஹர் இறைஇல்லப் பணிகளில் தன்னை இணைத்து இன்பமுற்றவர். அவரது தொலை நோக்கு சிந்தனையில் சிதறிய முத்தான இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் ஆரம்பித்து ஏகத்துவ ஒளி நகரில் பாய வழி வகுத்தவர். ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி தோன்ற பெரும் பங்காற்றியவர். வேகமான விவேகமென்றால் என்ன? என்று அன்பர்களுக்கு பாடம் நடத்தியவர். தவறுகளை தாட்சன்யமின்றி தட்டிக்கேட்டவர். எளிமையை ஏற்றவர். பொறுமையில் தோய்ந்தவர். இன்முகத்தைக் கொண்டவர். SK மாமா என்று அழைக்கப்படும் அன்பாளர்..... சென்று விட்டார் நம்மை பிரிந்து!!
வல்லவன் அல்லாஹ் அவரது பிழைகளை பொறுத்து, அவரது அனைத்து நல்லமல்களையும் அங்கீகரித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவனத்தை கொடுத்தருள்வானாக! அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அல்லாஹ் அவர்களுக்கு பொறுமையை தந்தருளவும் பிரார்த்திக்கிறோம்!!!
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தகவல்:
ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி நலக்குழு,
ஜித்தா, மக்கா.
1. காயலின் பொக்கிஷம் மர்ஹூம் SK தோளவாப்பா: posted bySalai Sheikh Saleem (Dubai)[13 January 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2237
எப்படி இந்தியா ஒரு G .D நாயுடுவை சரியான வழியில் உபயோகப்படுத்தாமல் இழந்து நின்றதோ அதேபோலே காயல் பதியும் ஒரு பெரிய கலைக்களஞ்சியத்தை இழந்து நிற்கிறது. இனிமேலாவது நமதூரில் திறமைக்கு மதிப்புகொடுத்து ஊர்நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பிரிவினை அகற்றி செயலாற்றுவோமானால் நம்மை மிஞ்ச இப்புவிதனில் எவரும் இலர்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்கள் பிழைகளை பொறுத்து, அவரது அனைத்து நல்லமல்களையும் அங்கீகரித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவன பதியை கொடுத்தருள்வானாக! அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அல்லாஹ் அவர்களுக்கு பொறுமையை தந்தருளவும் பிரார்த்திக்கிறேன். ஆமீன்
2. Assalamu Alaikkum posted byAboobacker (yanbu)[13 January 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2243
அஸ்ஸலாமு அலைக்கும்.
எங்களின் அன்பிற்குறிய மாமா எஸ்.கே.அவர்களின் மறைவுச்செய்தி
கேள்வியுற்று மிகவும் அதிர்ச்சியும் கவலையுமடைந்தோம்.
அனைத்து மக்களிடமும் வயது வித்தியாசமின்றி மிகவும் இனிமையாக பழகியவர். அனைத்து சமுதாய மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர். அன்னாரின் மறைவு அனைவருக்கும் பெரும் பேரிழப்பாகும். அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கழினை தெரிவிப்பதுடன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹீம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து ஜன்னத்துள் பிர்தவ்ஸ் எனும் மேலான சுவனப்பதவியினைக்கொடுத்தருள இறைஞ்சுகிறோம். ஆமீன்
3. Lost of a community.................... posted byFazlur Rahman (Kandy. Sri Lanka)[14 January 2011] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 2259
This is a really sad day, and a great loss to all who knew him, may Allah give his family courage and strength and keep on going through this tough time.
4. Guiding Star posted byA.W.S. (Kayalpatnam)[14 January 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 2260
A.K.M. (Aaana kaana) M.T.S., L.K. Mama, M.K.T., S.O., S.A. all those beloved elders were known to us by their initials, not by their name. So did S.K. Mama.
I have encountered intellectuals, well educated people,social workers, people with presence of mind. All these qualities I found only in him.
5. மண்ணுக்குள் புதைந்த வைரம்... posted byMohamed Rafeeq (Holy Makkah)[14 January 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2264
இம்மை,மறுமை,உலகம்,ஊடகம்,மார்க்கம்,அரசியல்,வானம் பூமி,நாட்டு நடப்பு,நகைச்சுவை,பாட்டு,பதம்,இப்படி எதிலும் உம் மூளை ஒரு போதும் சளைத்ததில்லை! அத்துனை விஷயங்களும் உமக்குச் சர்க்கரை பொங்கல் தான்.சரிந்த தொப்பியும்,போர்த்திய சால்வையும்,மிடுக்குத்தோரணையும்,சொல்லும் விதமும்,கேட்பவர்கள்,கேட்ப்பார்...கேட்ப்பார்,கேட்டுக்கொண்டேயிருப்பார்!!!
காயல் மாநகரதின் மகுடத்தில்மின்னிக்கொண்டிருந்த வைரத்தை இன்று மண்ணில் புதைத்து விட்டோம்!உமக்காக நாங்கள் இரண்டு சொட்டு கண்ணீர் விடுவதிலும் கூட ஓர் நெருக்கம் தெரியத்தான் செய்கிறது.
சிறந்த சிந்தனையாளரும், பொதுநல ஊழியரும், சுயநலமற்றவருமான பெருமதிப்பிற்குரிய அல்ஹாஜ் M.L.ஷாஹுல் ஹமீத் (S.K.) அவர்கள், கடந்த 12.01.2011 அன்று காலை 11.20 மணிக்கு தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் (அழியும் உலகை விட்டும் நிலையான உலகத்தின் அளவில்) சேர்ந்துவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா மறுநாள் 13.01.2011 அன்று காலை 10.30 மணிக்கு காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். தங்களது இரங்கல் செய்திக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ தீங்கு விளைவித்திருந்தால், அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.
அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், இதனடியில் கண்ட அவர்களின் மக்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். அக்கடனை நாங்கள் திருப்பித்தரும் பொருட்டு, இந்த மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
மனமார்ந்த துஆக்களுடன்,
அல்ஹாஜ் சொளுக்கு S.S.M.செய்யித் அஹ்மத் கபீர் (மர்ஹூம் அவர்களின் சிறிய தந்தை) அல்ஹாஜ் சொளுக்கு S.S.M.யூஸுஃப் ஸாஹிப் - சாபு (சிறிய தந்தை)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross