2007 ஆம் ஆண்டு மத்திய அரசு சிறபான்மை அமைச்சகம் மூலம் துவக்கிய Merit-Cum-Means ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 1,16,000 பேர் பயன் பெற்றுள்ளனர். மாநில அரசின் துணையுடன் அமல்படுத்தப்படும் இத்திட்டத்தின் முழு பொருளாதாரம் மத்திய அரசினால் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பட்ட (Under Graduate) மற்றும் முது நிலை பட்ட (Post Graduate) தொழில் படிப்புகளுக்கான (Professional மற்றும் Technical) உதவிகள் வழங்கப்படுகிறது. 30௦% உதவி தொகை பெண்களுக்காக ஒதுக்கப்படுகிறது.
பதினொன்னாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007 - 2012) இத்திட்டத்திற்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் (2010 - 2011) இத்திட்டத்தின்கீழ் 135 கோடி ரூபாய் அளவில், 55,000 பேருக்கு ஊக்கதொகைகள் வழங்கப்பட உள்ளன. டிசம்பர் 31 , 2010 முடிய இவ்வாண்டு 36,932 பேருக்கு ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. திட்ட துவக்கம் முதல் இதுவரை 1,16,367 பேருக்கு ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டம் மத்திய அரசின் சிறுபான்மை சமுதாய மாணவர்களுக்கான மூன்று திட்டங்களில் ஒன்றாகும். இவை பிரதம மந்திரியின் சிறுபான்மை சமுதாயதிற்கான 15 - அம்ச திட்டம் மூலம் துவக்கப்பட்டது.
|