தற்போது சர்ச்சையில் உள்ள கடையக்குடி (கொம்புத்துறை) மற்றும் கருப்புடையார் வட்டம் (சிங்கித்துறை) பகுதிகளில் மீனவர் குடியேற்றங்கள் 1980
களிலும், 1990 களிலும் துவங்கின. அரசின் புறம்போக்கு நிலங்களில் தற்காலிக குடியேற்றங்களாக துவங்கிய அவை, காலப்போக்கில் நிரந்தர
குடியேற்றங்களாக மாறின. அரசு துறைகளின் துணையுடன் முதலில் குடும்ப அட்டையும், பின்னர் வாக்காளர் அட்டையும் பெறுவது இதுபோன்ற
குடியேற்றங்களில் நாம் காணும்
காட்சிகள்.
தனியார் இடங்களில் வழிப்பாட்டுதலங்களும், வழிப்பாட்டுதலங்களுக்கு சொந்தமான இடங்களில் வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு என்ற நடப்புகளை
காயல்பட்டணம் பல ஆண்டுகளாக கண்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் மரைக்கார்பள்ளிக்கு பாத்தியமான வக்ப் நிலங்களில் ஆக்கிரமிப்பு
உண்டாகி, பின்னர் உள்ளூர் அரசியல்வாதிகள் துணையுடன் அந்நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு, அப்பகுதி தற்போது சுலைமான் நகர் என்ற
பெயரில் காட்சி தருகிறது.
இச்செயல்களுக்கு லஞ்சம் பெரும் அரசுத்துறை அதிகாரிகளும், வாக்கு வங்கிகள் என்ற அடிப்படையில் அரசியல்வாதிகளும் உதவுவது வாடிக்கை.
தனியார் சொத்துக்களின் உரிமையாளர்களின் மெத்தனமும், நகரின் பொதுநல அமைப்புகளின் கவனக்குறைவும் இதில் சொல்லப்பட வேண்டிய
முக்கிய காரணம்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்தே ஆக்கிரமிப்பு பிரச்சனைகள் துவங்கின. அவர்கள் ஆட்சியின் கீழ் பழைய மன்னர்கள் ஆட்சியிலிருந்த பகுதிகள்
வரும்போது, அவைகளை கண்காணிக்க Land Settlement Scheme அறிவிக்கப்பட்டது. Board Standing Orders (BSO) என்று
கூறப்படும் விதிமுறைகள் அவைகள் குறித்ததே. பின்னர் அவை Revenue Standing Orders (RSO) என பெயர் மாற்றம் பெற்றது. ஆக்கிரமிப்பு
குறித்த முக்கிய சட்டம் Tamilnadu Land Encroachment Act, 1905 ஆகும். இது தவிர Tamil Nadu Revenue Recovery Act, 1864, Tamilnadu
Public Premises (Eviction of unauthorised occupants) Amended Act, 1976 போன்ற சட்டங்களும் இது குறித்தவையே.
RSO 15 எனப்படும் விதி ஆண்டுக்கு 16,000 ரூபாய் வரை வருமானம் உள்ளவர்க்கு, விவசாயம் செய்ய, புறம்போக்கு நிலம் தர வழிவகுக்கிறது. RSO
21 எனப்படும் விதி கிராமபுரங்களில் ஆண்டுக்கு 16,000 ரூபாய் வரை வருமானம் உள்ளவர்க்கும், நகர்ப்புறங்களில் ஆண்டுக்கு 24,000 ரூபாய் வரை
வருமானம் உள்ளவர்க்கும், வீடு கட்ட, புறம்போக்கு நிலம் தர வழிவகுக்கிறது.
ஆக்கிரமிப்புகள் பொறுத்தவரை எவ்வளவு விரைவில் அவைகள் கவனிக்கப்படுகிறதோ, அவ்வளவு எளிது அவைகளை அப்புறப்படுத்துவது.
இப்பிரச்சனையை சட்டம் கருணை அடிப்படையிலேயே அணுகுகிறது. புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் ஏழைகள் என்ற பட்சத்தில், அரசுக்கு
அந்த இடம் எந்த பிரயோசனமும் இல்லை என்று நிறுவப்பட்டப்பின், அவ்விடத்திற்கு, ஆக்கிரமித்தவர்க்கே, பட்டா வழங்க சட்டத்தில் வழி உண்டு.
டிசம்பர் 30௦, 2006 அன்று வெளியான அரசு ஆணை எண்.854 - ஒருவர் புறம்போக்கு நிலத்தை தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆக்கிரமித்து
வந்திருந்தால், அந்நிலத்திற்கான பட்டா வழங்க மாவட்ட ஆச்சியர்க்கு அதிகாரம் வழங்கியது. ஒரு முறை வழங்கப்படும் வாய்ப்பு (One time
regularisation) என்ற அடிப்படையில் வெளியிடப்பட்ட இவ்வாணையை தொடர்ந்து, ஜனவரி 23௦, 2008 அன்று வெளியான மற்றொரு அரசு ஆணை
(எண்.34), காலவரம்பை 10 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைத்தது.
இவ்வாறு சட்ட வழிகள் இருக்கும்போது, ஆக்கிரமிப்புகளை சட்ட ரீதியாக எவ்வாறு அணுகுவது? இதற்கும் சட்டம் வழிக்காட்டுகிறது.
Tamilnadu Land Encroachment Act, 1905 சட்டப்படி கிராம அதிகாரி (Village Administrative Officer) மாதம் ஒருமுறை ஊரில் உள்ள
அனைத்து அரசு புறம்போக்கு நிலங்களையும் மேற்பார்வையிட வேண்டும். அவ்வாறு மேற்பார்வையிடும் போது கவனத்தில் வரும் ஆக்கிரமிப்புகளை
சர்வே எண்ணுடன் அடங்கல் என்னும் புத்தகத்தில் எழுதி, மாத இறுதியில் B Memo என கூறப்படும் அறிவிப்புகளை வருவாய் அதிகாரியிடம் (Revenue
Inspector) சமர்பிக்கவேண்டும்.
வருவாய் அதிகாரி குறைந்தது ஆண்டுக்கு இரண்டு முறை புறம்போக்கு நிலங்களை மேற்பார்வையிட வேண்டும். கிராம அதிகாரியால் தரப்படும்
அறிக்கை கொண்டு, ஆக்கிரமிப்பு நிலங்களை மீண்டும் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை சட்ட விதிகளுக்குட்பட்டு
வழங்கவேண்டும். காயல்பட்டணத்தில் இவ்விதிகள் பின்பற்றபடுகிறதா என்பது கேள்விக்குறியே.
இவ்விதிகளை, வழிமுறைகளை அறியாமல் இருப்பதாலும், அவைகளை கண்காணிப்பது எளிதல்ல என்பதாலும் - நகரிலுள்ள ஏறத்தாழ அனைத்து
பொதுநல அமைப்புகளும் இதுவரை ஆக்கிரமிப்புகள் விசயத்தில் சரியான வழியில் செயல்படவில்லை என்பதே வருதத்திற்க்குரிய உண்மையாகும்.
இது குறித்த நடவடிக்கைகள் காலம் தாழ்த்தியே பல வேளைகளில் எடுக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் சங்கங்கள் சார்பாக காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையிடம் வழங்கப்பட்ட தொலைநோக்கு
பார்வையில் காயல்பட்டினம் - செயல்திட்ட முன்வடிவு என்ற அறிக்கை நகரில் ஆக்கிரமிப்பு என்பது முக்கிய பிரச்சனை என்பதை கருத்தில்
கொண்டு - அது பரிந்துரைத்த பல துணைக் குழுக்களில் ஆக்கிரமிப்பு குறித்த துணைக்குழுவினையே முதல் துணைக்குழுவாக பரிந்துரைத்துள்ளது.
தமிழக அரசின் வருவாய்துறை வெளியிட்டுள்ள ஆக்கிரமிப்பு குறித்த கையேடு ஆங்கிலத்தில் கீழே:-
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross