காயல்பட்டினம் நகரில் நேற்று காலை 10.00 மணி முதல் இன்று அதிகாலை வரை தூறலும், சிறு சாரலுமாக இதமான மழை பெய்து கொண்டிருந்தது.
நேற்றிரவு பலமுறை மின் வினியோகம் தடைபட்டது. அதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கையில்,
மின் வினியோகம் செய்வதற்காக மீண்டும் மீண்டும் இணைப்பு கொடுக்கப்பட்டபோதெல்லாம் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுக் கொண்டேயிருந்ததாகவும், காயல்பட்டினம் கடையக்குடி, கற்புடையார் வட்டம் பகுதிகள் வரையிலும் சென்று பழுதான மின்கம்பத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் பல மணி நேரம் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர் என்றும், இருந்தபோதிலும், இருள் நிறைந்த பகுதிகளில் அவர்களால் உடனடியாகக் கண்டுபிடிக்க இயலாத நிலையில், கம்பத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் அலுவலர்களை நிறுத்தி, மின் இணைப்பு கொடுக்கப்பட்டபோதுதான் காயல்பட்டினம் சேதுராஜா தெருவிலுள்ள கோயிலுக்கு அருகிலிருந்த மின் கம்பத்திலிருந்து தீப்பொறி விழுவது கண்டுபிடிக்கப்பட்டது என்றும்,
அப்பகுதியிலிருந்த சிறுவர்கள் விட்ட பட்டம் மின் கம்பத்திலுள்ள இன்சுலேட்டரில் சுற்றிக் கொண்டதாகவும், பட்டத்தின் வால் துணிப்பகுதி மழையால் ஈரமுற்றதால், இன்சுலேட்டரை அது பழுதாக்கிவிட்டதாகவும், இரவு 11.45 மணியளவில் புதிய இன்சுலேட்டர் பொருத்தி, மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். |