இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து காவலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
இலங்கையின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என தாங்கள் அறிவீர்கள். முஸ்லிம்கள் உட்பட அனைத்து இன மக்கள் சுமார் 10 லட்சம் பேர் இவ்வெள்ளத்தால் கடந்த மூன்று நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தேவையான அடிப்படை உணவுகள் கொண்டு சேர்க்க முடியவில்லை. உணவின்றி பலர் மயங்கியும் உள்ளனர். சிலர் இறக்கவும் செய்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை காப்பாற்ற வெளிநாட்டு உதவியும், பணமும் தேவையுள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகர் காணும் வெள்ளத்தை விட இது மிகவும் மோசமானது.
காவாலங்கா சார்பாக - தாங்கள், தங்கள் நண்பர்கள், உறவினர்கள், காயல் நல மன்றங்களின் உறுப்பினர்கள் மூலம் நிதி திரட்டி, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ எங்களை அணுக வேண்டுகிறோம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|