காயல்பட்டினத்தில் ஒரே நாளில் இரண்டு வீடுகளில் உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் 55 பவுன் நகையை கொள்ளையடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.8.50 லட்சம் ஆகும்.
காயல்பட்டினம் எல்.எப் ரோட்டைச் சேர்ந்தவர் ஷேக் முகம்மது சாலிஹ் (47). இவர் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் பழைய மரக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் வளாகத்திலேயே இவரது சகோதரி செய்யிது ராழியா என்பவரது வீடு உள்ளது. இரு வீட்டிற்கு ஒரே வாசல் வழியாக சென்று வருவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டிற்கள் தனித்தனி அறைகளில் தூங்கி கொண்டிருந்தனர். அந்த சமயம் அதிகாலையில் செய்யது ராழியா வீட்டின் சமையல் அறையில் ஜன்னல் கம்பியை உடைத்து எடுத்து அதன் வழியாக உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் மத்தி அறையில் உள்ள அலமாரியில் பீரோ சாவியை எடுத்து, பீரோவிலிருந்து 35 பவுன் நகைகளை எடுத்து சென்றனர்.
இந்த நகைகளை வைக்கப்பட்டிருந்த நகை பாக்சை வீட்டின் அருகே இருந்த தோட்டத்தில் வீசி சென்று இருந்தனர். இந்நிலையில் ஷேக் முகம்மது சாலிஹ் மாமானார் செய்யதுதஹ்மது தோட்டத்திற்கு சென்ற போது, அங்கே நகை பாக்ஸ்கள் சிதறி கிடந்தன. இதனை கண்டு திடுக்கிட்ட அவர் வீட்டிற்குள் சென்ற பார்த்த போது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
காயல்பட்டினம் அருணாசலபுரத்தைச் சேர்ந்த சேவியர் மனைவி புனிதா(48). சேவியர் 11 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தூத்துக்குடி பல்நோக்கு சேவை மையத்தில் மீனவர் மகளிர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளராக புனிதா பணியாற்றி வருகிறார். இவருக்கு லினிட்டா என்ற ஒரே மகள் உள்ளார்.
இவர் காயல்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 2ம் ஆண்டு படித்து வருகிறார். புனிதா இன்று காலை வழக்கம் போல் தூத்துக்குடி வேலைக்கு சென்றுவிட்டார். மகள் லினிட்டா கல்லூரிக்கு சென்று விட்டார். மாலையில் லினிட்டா வீடு திரும்பிய போது உள்ளே பீரோ திறந்து கிடந்தது. உள்ளே இருந்த நகைகள் மாயமாகி இருந்தது.
இதனை கண்டு திடுக்கிட்ட லினிட்டா உடனடியாக தனது தாய்க்கு தகவல் தெரிவித்தார். வந்த பார்த்த போது வீட்டின் மேல்பக்க ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம ஆசாமிகள் கட்டிலிலிருந்து சாவியை எடுத்து பீரோவை திறந்து 20 பவுன் தங்க நகைகளை எடுத்து சென்றது தெரியவந்தது. இரு சம்பவங்கள் குறித்து ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.
சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. கபில்குமார் சரத்கர், திருச்செந்தூர் டி.எஸ்.பி. ராஜமோகன், திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் இசக்கி, ஆறுமுகநேரி சப் இன்ஸ்பெக்டர்கள் சபிதா, வைகுண்டம் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்தில் விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. ஒரே நாளில் இரு வீடுகளில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2. வரும் முன் காப்போம்!!! posted byMohamed Rafeeq (Holy Makkah)[15 January 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2283
இது போன்ற துனிகர திருட்டுக்களை தவிர்க்க நாம் கடைபிடிக்க வேண்டியவை சில,1)இரவு உறங்கப்போகும் முன் அனைத்துக் கதவுகளையும் பூட்டி விட்டோமா?என சரி பார்த்தல்,குறிப்பாக மாடியில் உள்ள கதவுக்கு அதிக கவனம் தேவை.2)மின் விசிறியின் சுழல் வேகத்தை குறைத்து வைத்து படுப்பது நல்லது.காரணம் அதன் சத்தத்தில் வெளியில் இடி விழுந்தாலும் கூட விளங்காது.3)மின்சார செலவைப் பார்க்காமல் வீட்டுக்கு வெளியே ஒரு மின் விளக்கையாவது விடியும் வரை எரிய விட வேண்டும்.4)நள்ளிரவு நேரங்களில் ஏதேனும் சத்தம் கேட்டால் சற்றும் பதறாமல்,யார்?என்ன?என்று அதிகாரத்தொனியில் குரல் எழுப்புவதோடு,கதவைத் தடால் மடால் எனத் திறப்பது போல் பாசாங்கு செய்ய வேண்டும்.நம்மை விடத் திருட வந்தவனுக்குத் தான் அதிக பயம் இருக்கும்.5)இரவில் நேரத்தோடு தூங்கி காலையில் நேரத்தோடு எழும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுதல் நலம்.வெகு நேரம் கண் விழித்து அசந்து தூங்குவது திருடனுக்கு வெல்க்கம் சொல்வது போல,6)இரவில் வெளிக் காற்றுக்காக ஜன்னலைத் திறந்து வைப்போர்(பெண்கள்)நகைகள் அணியாதிப்பது நல்லது. 7).ஜன்னல் வலை போடுவது திருடர்,கொசு,பூச்சி,பல்லித் தொல்லைகளைத் தவிர்க்க உதவும்.எனவே,வரும் முன் காத்தால்...வருத்தத்தைத் தவிர்க்கலாம்.
யோசனைகள் தருவது.., <
என்றும் அன்புடன்,
M.N.L.முஹம்மது ரபீக்,
புனித மக்கா.
3. Safety.... posted byRasheed ZAMAN (Singapore)[15 January 2011] IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 2286
Salaams to all...In recent past this has been happening in our home town and my suggestion is that jewellery is one of a valuable asset which has to be taken care of...may be a safe box (irumbu petti) or bank safety locker will prevent such incidents...this may cost you a little (one time or per year) but your valuable will be safe...
What happened to our Goorkas? are they still active in our home town? if yes they should be called in by Iykkiyap Peravai to look into this matter. A watchdog to appoint to moniter Goorkas movements to see are they really doing their job.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross