தமிழக அரசின் கடலோரபகுதிகளில் ஆபத்தான இடங்களில் உள்ள வீடுகளை மாற்று இடத்தில் கட்டும் திட்டத்தின் கீழ் [Vulnerability Reduction of
Coastal Communities (VRCC)] காயல்பட்டணத்தில் கடையக்குடி (கொம்புதுறை) பகுதியில் 8 வீடுகள் ஏற்கனவே கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.
தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ள கருப்புடையார் வட்டம் பகுதியில் நடக்கும் கட்டுமான பணிகள் குறித்த விவாதங்களில் கடையக்குடி
குடியிருப்புகள் குறித்த கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளது. கருப்புடையார் வட்டம் (சிங்கித்துறை) குடியிருப்புகள் எப்படி வந்தது என முன்னர் பார்த்தோம். கடையக்குடி (கொம்புதுறை) குடியிருப்புகள்
எப்படி வந்தது என உள்ள ஆதாரங்கள் கொண்டு பார்ப்போம்.
தூத்துக்குடி மாவட்ட கத்தோலிக் தேவாலயங்கள் குறித்த தகவல் தரும் இணையதளம் - 16வது
நூற்றாண்டில் பிரான்சிஸ் சேவியர் (St.Francis Xavier) என்ற பிரபல போர்சுகீஸ் பாதிரியார் - மணப்பாடுக்கும், புன்னகாயலுக்கும்
பயணிக்கும்போது இப்பகுதியில் தங்குவார் என கூறுகிறது. அக்காலத்தில் கரையர் என்ற மக்கள் இங்கு வாழ்ந்ததாகவும், பின்னர் அவர்கள் நாட்டின்
உள்பகுதிகளுக்கு குடிபெயர்ந்ததாகவும் அவ்விணயதளம் கூறுகிறது.
மேலும் பிரான்சிஸ் சேவியர் காலத்தில் புனித ஸ்டீபன் தேவாலயம் (St.Stephen's Church) இந்த இடத்தில கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக
பிரான்சிஸ் சேவியர் உடைய கடிதங்கள் எடுத்து வைக்கப்படுகிறது. அக்கடிதங்களின் சில பக்கங்களின் Henry James Colleridge உடைய
மொழிப்பெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சிஸ் சேவியர் கடிதங்களில் குறிப்பிடப்படும் Combutur காயல்பட்டினத்திற்கு அருகே உள்ள கொம்புகிரயூர் என்ற மீனவ கிராமம் என A
History of Tinnevelly என்ற புத்தகத்தை 1881 ஆம் ஆண்டு எழுதிய பிஷப் கால்டுவெல் (Bishop Caldwell) கூறுகிறார்.
கடையர் என்ற மற்றொரு மீனவ சமுதாயத்தின் பெயராலேயே கடையக்குடி என இப்பகுதி பின்னர் அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கரையர்கள் அப்பகுதியை விட்டு சென்றபின் யாரும் அங்கு வசிக்கவில்லை என்றும், 1930 ஆம் ஆண்டு புன்னகாயலில் இருந்து ஒரு குடும்பம் இங்கு
குடிபெயர்ந்ததாகவும், பின்னர் வீரப்பாண்டியபட்டினத்தில் இருந்த சில குடும்பங்கள் இங்குள்ள தேவாலயத்தை பராமரித்து வந்ததாகவும் கத்தோலிக
தேவாலயங்கள் குறித்த இணையதளம் மேலும் கூறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியபட்டணம் என்ற ஊரில் இருந்து 1981 ஆம் ஆண்டு மக்கள் இப்பகுதிக்கு பெருந்திரளாக மீன் தொழிலுக்கு
வந்ததாக கூறப்படுகிறது. இக்குடிபெயர்ப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு என்ற ஊரில் 1982 ஆம் ஆண்டு நடந்த கலவரத்திற்கு பிறகு
நடந்ததாக சில தகவல்கள் கூறுகின்றன. அம்மக்களே தற்போது அப்பகுதியில் பெரும்வாரியாக இருப்பதாக தெரிகிறது.
1983 ஆண்டு முதல் வீரப்பாண்டியபட்டண தேவாலயத்தின் கீழ் (Sub-Station) இருந்த இப்பகுதி, 2003 ஆம் ஆண்டு முதல் தனி தேவாலயமாக
(Independent Parish) செயல்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி 2 அன்று தேவாலயத்தில் விழா (Feast of the Patron Saint)
எடுக்கப்படுகிறது.
அக்டோபர் 2010 இல் தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் இப்பகுதியில் இருந்து 455 பேர் இடம் பெற்றுள்ளனர். மேலும்
அப்பட்டியல் இவ்விடத்தினை குறிப்பிடும் போது கடையக்குடி என்றே கூறுகிறது.
|