பாபரி மஸ்ஜித் குறித்த தீர்ப்பைக் கண்டித்து, வரும் ஜனவரி 27ஆம் தேதியன்று இம்மாதம் 27ஆம் தேதியன்று மதுரை உயர்நீதி மன்றம் முன்பு, மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், காயல்பட்டினம் நகரிலிருந்து பொதுமக்கள் கலந்துகொள்வதற்காக செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம், தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் காயல்பட்டினம் கிளை அலுவலகத்தில் 09.01.2011 அன்று, ஷம்சுத்தீன் தலைமையில் நடைபெற்றது.
ஜனவரி 27ஆம் தேதியன்று மதுரையில் நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காயல்பட்டினத்திலிருந்து அதிகமான பொதுமக்களை அழைத்துச் செல்வதென்றும்,
ஆர்ப்பாட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 22.01.2011 அன்று காலையில் காயல்பட்டினத்தில் சைக்கிள் பேரணி நடத்துவதென்றும்,
அன்று மாலையில், அமைப்பின் மாநில தலைவர் பக்கீர் முஹம்மத் அல்தாஃபீ உரையாற்றும் பொதுக்கூட்டத்தை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் அமைப்பின் நகர கிளை நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
சேக் முஜீப்,
நெசவுத் தெரு, காயல்பட்டினம். |