 |  |
செய்தி எண் (ID #) 5446 | |  | திங்கள், ஐனவரி 10, 2011 | கருப்புடையார் வட்டம் (சிங்கித்துறை) குடியிருப்புகள் எப்படி வந்தது? | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 3606 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய | |
தமிழக அரசின் கடலோரபகுதிகளில் ஆபத்தான இடங்களில் உள்ள வீடுகளை மாற்று இடத்தில கட்டும் திட்டத்தின் கீழ் [Vulnerability Reduction
of Coastal Communities (VRCC)] தற்போது காயல்பட்டணத்தில் கருப்புடையார் வட்டம் பகுதியில் 169 சுனாமி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. மொத்தம் 213 குடியிருப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு பயன்படுத்தப்படும் நிலம் மோசடி செய்து பெறப்பட்டுள்ளது என கூறி காயல்பட்டணத்தில் கடை அடைப்பும் மற்றும் ஆர்ப்பாட்டமும் ஜனவரி 4 அன்று காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை ஏற்பாட்டில் நடைப்பெற்றது. இதுகுறித்த எதிர்ப்பினை அரசிடம் தெரிவிக்கும்ப்படி ஐக்கிய பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.
ஆங்கில நாளிதழ் தி ஹிந்துவில் நேற்று வெளியான ஒரு செய்தியில் கருப்புடையார் வட்டம் (சிங்கித்துறை) பகுதியில் வசிப்பவர்கள் பல ஆண்டுகளாக மீன் தொழிலில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்களிடம் குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அட்டை உள்ளது என்றும் தூத்துக்குடி நாட்டு படகு மீனவர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஜி.கயேஸ் கூறியுள்ளார்.
இந்த குடியிருப்புகள் எப்போது துவங்கின என்று தெளிவான ஆதாரங்கள் இல்லை. தூத்துக்குடி மாவட்ட கத்தோலிக் தேவாலயங்கள் குறித்த தகவல்
தரும் இணையதளம் - கீழவைப்பார் மற்றும் சிப்பிக்குள மீனவர்கள் சிங்கி எரால் பருவத்தில் (Lobster Season) மீன் பிடிக்க இப்பகுதிக்கு வருவார்கள் என்றும், அவர்கள் காலவாக்கில் கருப்புடையார் வட்ட பகுதியில் குடியேற துவங்கியதாகவும் கூறுகிறது. தற்போது அங்கு 210 (கிருஸ்துவ) குடும்பங்கள் உள்ளது என்று மேலும் அவ்விணயதளம் தெரிவிக்கின்றது.
1992 ஆண்டு முதல் வீரப்பாண்டியபட்டண தேவாலயத்தின் கீழ் (Sub-Station) இருந்த இப்பகுதி, 2001 ஆம் ஆண்டு செல்வா மாதா தேவாலயம்
கட்டப்பட்டப்பின்னர், 2002 ஆண்டு முதல் தனி தேவாலயமாக (Independent Parish) செயல்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 25 அன்று தேவாலயத்தில் விழா (Feast of the Patroness) எடுக்கப்படுகிறது.
அக்டோபர் 2010 இல் தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் இப்பகுதியில் இருந்து 709 பேர் இடம் பெற்றுள்ளனர். மேலும் அப்பட்டியல் இவ்விடத்தினை குறிப்பிடும் போது கருப்புடையார் வட்டம் - சிங்கித்துறை என இணைத்தே கூறியுள்ளது.
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
 |
|
|