மலபார் காயல் வெல்ஃபேர் அசோசியேசன்(MKWA) உடைய மாதாந்திர செயற்க்குழு கூட்டம் 09-01-2011 அன்று அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. தலைவர் மசூது அவர்களின் துவக்க உரையுடன் கூட்டம் ஆரம்பமானது.
MKWA விற்கு அரசு அனுமதி கிடைத்த செய்தியை (பதிவு எண் 687/2010) செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் கூட்டத்திற்கு தெரிவித்தார்.
காயல்பட்டினத்தில் இருந்து உதவிகள் கோரி கிடைக்கப்பட்ட மனுக்களின் மீது விவாதங்கள் நடத்தி முன்னுரிமை அடிப்படையில் உறுப்பினர்களை விசாரணைக்கு பணிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1) அலுவலகம் செயல்படும் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக பெயர் பலகை வைப்பது
2) வங்கியில் கணக்கு துவக்குவது
3) அமைப்பு விதிகளை (Bye Laws) தமிழில் மொழிப்பெயர்த்து, புத்தக வடிவில் பொது மக்களுக்கு விநியோகம் செய்வது. இதற்காக மூன்று நபர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது
4) கூட்டத்திற்கு சரியான முறையில் வராத உறுப்பினர்களிடம் விளக்கம் பெறுவது. இதற்கும் மூன்று நபர்கள் கொண்ட ஒரு குழுவை நியமிக்கப்பட்டுள்ளது
5) சந்தா வசூல் பண்ணுவதற்கு பொருளாளரின் உதவிக்காக உறுப்பினர் ஒருவரை நியமனம் செய்வது
6) காயல் டுடே இணையதளத்தின் வேண்டுகோளுக்கு இணங்க kayaltoday.com க்கும் செய்திகளை கொடுப்பது.
காலை 11:30 மணிக்கு துவங்கிய கூட்டம், மதியம் 1:30 மணிக்கு உறுப்பினர்களின் பிரார்த்தனைகளுடன் நிறைவு பெற்றன.
தகவல்:
K.M.முஹம்மத் ரஃபீக் (KRS),
செய்தித் தொடர்பாளர்,
மலபார் காயல் வெல்ஃபேர் அசோசியேஷன்,
கோழிக்கோடு, கேரள மாநிலம். |