வாக்காளர் பட்டியலின் சுருக்க திருத்தம் (Summary Revision) 2011 - அக்டோபர் 25 முதல் நவம்பர் 13 வரை நடைபெற்றது. அக்டோபர் 25, 2010 அன்று வெளியிடப்பட்ட சுருக்க திருத்தத்தின், வரைவு வாக்காளர் பட்டியலில்படி (Draft Electoral Roll) 449.16 லட்ச வாக்காளர்கள் (ஆண்கள் - 225.44 லட்சம்; பெண்கள் - 223.72 லட்சம்) தமிழகத்தில் உள்ளனர்.
திருத்த காலத்தில் 13.02 லட்ச விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவைகளில் 11.52 லட்ச விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும், இந்த திருத்த காலக்கட்டத்தில், இட மாற்றம், இறப்பு மற்றும் ஒருமுறைக்கு மேலே இருந்த பெயர்கள் என்ற காரணங்களுக்காக 1.06 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (10.1.2011) தேர்தல் பதிவு அலுவலர்களால் வெளியிடப்பட்டது.
சுருக்க திருத்தம் (Summary Revision) 2011 உடைய இறுதி வாக்காளர் பட்டியல்படி தமிழகத்தில் - 459.62 லட்ச வாக்காளர்கள் (ஆண்கள் - 230.89 லட்சம்; பெண்கள் - 228.73 லட்சம்) உள்ளனர். வாக்காளர் பட்டியலில் நிகர (Net) இணைப்பு 10.46 லட்சம்.
தேசிய வாக்காளர் தினம் (National Voters Day) - ஜனவரி 25 அன்று - புதிதாக இணைக்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அட்டை (EPIC Cards) - வாக்குச்சாவடிகளிலேயே வழங்கப்படும். மக்கள் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என அருகில் உள்ள மாநகராட்சியின் வட்டார அலுவலகத்திலேயோ அல்லது தாலுகா அலுவலகத்திலேயோ பார்த்துக்கொள்ளலாம்.
தகவல்:
தலைமை தேர்தல் அதிகாரி,
தமிழ் நாடு. |